21நாள் தனிமை-70 ஸ் 80ஸ் 90ஸ் 2கே கிட்ஸா இதை எல்லாம் செய்யுங்க

21 நாள் தனிமையில் என்ன எல்லாம் செய்யலாம் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதே நலம். யூ டியூப்பில் நிறைய படங்கள்ள் கொட்டிகிடக்கின்றன. அதை எல்லாம் பாருங்கள். உதாரணமாக 60ஸ்,70,ஸ் கிட்ஸ் ஆட்கள் எல்லாம் உங்க அப்பா அம்மாவா இருப்பாங்க. அவங்களுக்கு மனநிலையை தெளிவாக்கும் அந்தக்காலத்து படங்களை டவுன்லோட் செஞ்சு கொடுங்க. உதாரணமா உங்க அம்மா அப்பா எல்லாம் பாசமலரும் பாதகாணிக்கையும் பார்மகளே பார் இது போல சென் டிமென் ட் படங்களின் ரசிகராய் இருப்பர் அவர்களுக்கு டவுன்
 

21 நாள் தனிமையில் என்ன எல்லாம் செய்யலாம் வெளியில் செல்லாமல் வீட்டுக்குள் இருப்பதே நலம். யூ டியூப்பில் நிறைய படங்கள்ள் கொட்டிகிடக்கின்றன. அதை எல்லாம் பாருங்கள்.

21நாள் தனிமை-70 ஸ் 80ஸ் 90ஸ் 2கே கிட்ஸா இதை எல்லாம் செய்யுங்க

உதாரணமாக 60ஸ்,70,ஸ் கிட்ஸ் ஆட்கள் எல்லாம் உங்க அப்பா அம்மாவா இருப்பாங்க. அவங்களுக்கு மனநிலையை தெளிவாக்கும் அந்தக்காலத்து படங்களை டவுன்லோட் செஞ்சு கொடுங்க. உதாரணமா உங்க அம்மா அப்பா எல்லாம் பாசமலரும் பாதகாணிக்கையும் பார்மகளே பார் இது போல சென் டிமென் ட் படங்களின் ரசிகராய் இருப்பர் அவர்களுக்கு டவுன் லோட் செஞ்சு அவங்க மொபைல்ல பதிவேற்றி கொடுங்க அவங்க ஜாலியா ஒரு படம் பார்க்கட்டும்.

இல்ல சஸ்பென்ஸ் படம் பார்க்கும் உங்க அப்பாவுக்கு அந்தக்கால தென்னிந்திய ஜேம்ஸ்பாண்ட் ஜெய்சங்கரின் படங்களை டவுன் லோட் செஞ்சு கொடுங்க தெரிஞ்சவங்க அந்த படங்களை டவுன் லோட் செஞ்சு பாருங்க. அப்படியே அந்தக்கால நினைவுகளில் மூழ்குங்க ஏகாந்தமா இருங்க. வெளியே மட்டும் வராதிங்க ப்ளீஸ்.

80, 90ஸ் கிட்ஸ்-ரஜினி, கமல், விஜயகாந்த் மோகன், சத்யராஜ், பிரபு, கார்த்திக் இவர்கள் நடிப்பில் உங்களுக்கு பிடிச்ச படங்களை பாருங்க.உங்களுக்கு பிடிச்ச இளையராஜா பாட்ட கேளுங்க. உங்கள் கல்லூரி கால நியாபகங்களையும் நியாபகப்படுத்தி மனதை இனிமையா வச்சுக்கங்க கொரோனா வைரஸ் பாதிப்பு செய்திகளை அதிகம் பார்த்து மனதை கெடுத்து கொள்ளாதீர்கள்.

2கே கிட்ஸ்- நீங்க அஜீத்த பார்த்தாலும் சரி விஜய்ய பார்த்தாலும் சரி ரகளையா உங்க ஆதர்ஸ நாயகர்களை பார்த்து கொண்டாடுங்க. அமரவாதில ஆரம்பிச்சு நேர்கொண்ட பார்வை வரையும் நாளைய தீர்ப்புல ஆரம்பிச்சு பிகில் வரை ஒரு படத்தை விடாதிங்க, எல்லாமே யூ டியூப்லயும் அமேசான்லயும் கிடைக்குது வீட்ட விட்டு வெளிய மட்டும் வந்துறாதிங்க ஜாலியா இருங்க சந்தோஷமா இருங்க. கொரோனா வைரஸ் அப்டேட் அதிகம் பார்க்காதிங்க- வெளியில் மட்டும் வந்து மற்றவர்களுக்கு ஸ்ப்ரெட் பண்ணாதிங்க.

அவங்க அவங்களுக்கு பிடிச்சதை செய்யுங்க அரசாங்கத்துக்கு மட்டும்தொந்தரவு கொடுக்காதிங்க.

From around the web