செல்வராகவனுக்கு ராசியான ஆண்டாக மாறிய 2021: என்னென்ன நடந்தது தெரியும?

 

பிரபல இயக்குனர் செல்வராகவன் ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் இடையே பல வருட இடைவெளி விடுவார் என்பது தான் இதுவரை நடந்த நிகழ்வாக உள்ளது. அவர் திரையுலகில் அறிமுகமாகி 18 ஆண்டுகளாகியும் வெறும் எட்டு படங்கள் மட்டுமே இயக்கி உள்ளார் என்பதும் ஓரிரு படங்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் இந்த ஆண்டு அவருக்கு நல்ல ஆண்டாக அமைய உள்ளது ஆரம்பத்திலேயே தெரியவருகிறது. ஏற்கனவே சாணி காகிதம் என்ற திரைப்படத்தில் நடித்து வரும் செல்வராகவன், தனுஷ் நடிக்க உள்ள திரைப்படத்தை விரைவில் இயக்கப் போகிறார் என்பது குறிப்பிடத்தக்கது

selvaragavan

அதேபோல் செல்வராகவன் இயக்கத்தில் உருவாகிய நெஞ்சம் மறப்பதில்லை என்ற திரைப்படம் கடந்த 4 ஆண்டுகளாக முடங்கிப் போயிருந்த நிலையில் தற்போது அந்த திரைப்படம் வெளியாகும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த திரைப்படம் பிப்ரவரி அல்லது மார்ச் மாதம் வெளியிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய வருவதாகவும் இந்த படத்தின் வியாபாரம் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின்னர் செல்வராகவனின் அடுத்த படம் வெளியாக உள்ளது அவரது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

selvaragavan

மேலும் இன்று செல்வராகவனுக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. எனவே இந்த ஆண்டு செல்வராகவனுக்கு அடுத்தடுத்து நல்ல செய்திகளாக வந்து கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web