2020ல் தனுஷின் ஐந்து படங்கள் ரிலீஸா?

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு படம் ஒரே ஆண்டில் வெளிவருவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் தனுஷின் 5 படங்கள் அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சுருளி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது
 
2020ல் தனுஷின் ஐந்து படங்கள் ரிலீஸா?

கோலிவுட் திரையுலகில் ஒரு நடிகரின் ஒரு படம் ஒரே ஆண்டில் வெளிவருவதே பெரும்பாடாக இருக்கும் நிலையில் தனுஷின் 5 படங்கள் அடுத்த ஆண்டு அதாவது 2020 ஆம் ஆண்டு வெளிவர வாய்ப்பு இருப்பதாக கோலிவுட் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன

தனுஷ் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கியுள்ள ‘பட்டாஸ்’ திரைப்படம் ஜனவரி 16 ஆம் தேதி வெளியாக உள்ளது என்பது தெரிந்ததே. இதனை அடுத்து தனுஷ் நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய சுருளி திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி அல்லது பிப்ரவரியில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

இந்த நிலையில் தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் திரைப்படமும் தனுஷ் நடிப்பில் ராம்குமார் இயக்கவுள்ள சத்யஜோதி தயாரிக்கும் திரைப்படமும் 2020ஆம் ஆண்டே வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

அதனை அடுத்து கலைப்புலி தாணு அவர்கள் தயாரிப்பில் தனுஷ் நடிப்பில் செல்வராகவன் இயக்கும் படம் அடுத்த ஆண்டுக்குள் படப்பிடிப்பை முடிக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த நிலையில் நேற்று சன் பிக்சர்ஸ் வெளியிட்ட ஒரு அறிவிப்பில் தனுஷ் நடிப்பில் ஒரு படத்தை அந்நிறுவனம் தயாரிக்கவுள்ளது.

இந்த படமும் அனேகமாக அடுத்தாண்டு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது எனவே மேற்கண்ட இந்த படங்கள் அடுத்தாண்டு வெளியாக வாய்ப்பு உள்ளதாக கருதப்படுவதால் 2020ஆம் ஆண்டு தனுசு ரசிகர்களுக்கு குஷியான ஆண்டாக இருக்கும் என கருதப்படுகிறது

From around the web