2019 தீபாவளியில் மோதும் ரஜினி, அஜித், விஜய் படங்கள்

கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆனது. ஆனால் அடுத்த தீபாவளி கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது. அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படம் 2019 தீபாவளி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது தெரிந்ததே இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ள படமும் அதே தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும், அதேபோல் ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் படமும் 2019 தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த 2005ஆம்
 
rajini-ajith-vijay1

2019 தீபாவளியில் மோதும் ரஜினி, அஜித், விஜய் படங்கள்கடந்த தீபாவளி அன்று விஜய் நடித்த ‘சர்கார்’ திரைப்படம் சோலோவாக ரிலீஸ் ஆனது. ஆனால் அடுத்த தீபாவளி கடும் போட்டியாக இருக்கும் என கருதப்படுகிறது.

அட்லி இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘தளபதி 63’ திரைப்படம் 2019 தீபாவளி ரிலீஸ் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது தெரிந்ததே

இந்த நிலையில் அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கவுள்ள படமும் அதே தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும், அதேபோல் ரஜினிகாந்த் – ஏ.ஆர்.முருகதாஸ் படமும் 2019 தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2005ஆம் ஆண்டில் ரஜினியின் சந்திரமுகி, கமலின் ‘மும்பை எக்ஸ்பிரஸ், விஜய்யின் சச்சின் வெளியானதை அடுத்து மீண்டும் மூன்று முன்னணி நடிகர்களின் படங்கள் ஒரே நாளில் வெளியாகவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web