இந்த நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் கூட அச்சடிக்கவில்லை: இந்திய ரிசர்வ் வங்கி

2019-20 நிதியாண்டில் ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது கடந்த 2016 ஆம் ஆண்டில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்பிழக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரூபாய் 500 மட்டும் 2,000 மதிப்பு கொண்ட புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பழக்கத்துக்கு வந்தன இருப்பினும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களின் மூலம்
 

இந்த நிதியாண்டில் ஒரு 2000 ரூபாய் கூட அச்சடிக்கவில்லை: இந்திய ரிசர்வ் வங்கி

2019-20 நிதியாண்டில் ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டு கூட அச்சடிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது பெரும் ஆச்சரியமாக உள்ளது

கடந்த 2016 ஆம் ஆண்டில் 500 ரூபாய் மற்றும் 1000 ரூபாய் மதிப்பிழக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்தது. அதன் பின்னர் ரூபாய் 500 மட்டும் 2,000 மதிப்பு கொண்ட புதிய நோட்டுகள் அச்சடிக்கப்பட்டு பழக்கத்துக்கு வந்தன

இருப்பினும் 2000 ரூபாய் நோட்டுகளை அச்சடிப்பது நிறுத்தப்பட்டதாக கடந்த சில மாதங்களாக சமூக வலைதளங்களின் மூலம் செய்திகள் வெளிவந்தாலும் ரிசர்வ் வங்கி அதனை உறுதி செய்யவில்லை. இந்த நிலையில் தற்போது 2019-20 நிதி ஆண்டில் ஒரே ஒரு 2000 ரூபாய் நோட்டை கூட அச்சடிக்கவில்லை என இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது

பொதுமக்கள் அதிகம் 2000 ரூபாய் நோட்டை பழக்கத்தில் கொண்டு வரவில்லை என்பதால் இந்த நோட்டு அச்சடிப்பது நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

From around the web