2.0 படத்துக்கு குழந்தைகளை கூட்டி செல்ல வேண்டாம்- பிரபல எழுத்தாளர்

சிறார் எழுத்தாளர் விழியன் என்பவர் 2.0 படத்தை பார்க்க குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என கூறி இருக்கிறார். இதற்கு காரணமாக அவர் கூறுவது . படத்தின் விசுவல் ட்ரீட் நன்றாகவே இருக்கிறது பெயர் போடுவதில் ஆரம்பித்து அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால் பக்ஷிராஜன் பறவைகளுக்காகப் போராடுகின்றார். அவர் தரப்பில் ஒரு துளிகூட அநியாயம் இருப்பதாகப் படத்தில்கூட காட்டவில்லை. இறந்தபிறகு அந்த பவித்ரமான ஆத்மா எப்படிக் கொடூரமான ஆத்மாவாக மாறுகின்றது. ஆரா கூற்றுப்படியும் இது எப்படி
 

சிறார் எழுத்தாளர் விழியன் என்பவர் 2.0 படத்தை பார்க்க குழந்தைகளை அழைத்து செல்ல வேண்டாம் என கூறி இருக்கிறார்.

இதற்கு காரணமாக அவர் கூறுவது .

2.0 படத்துக்கு குழந்தைகளை கூட்டி செல்ல வேண்டாம்- பிரபல எழுத்தாளர்

படத்தின் விசுவல் ட்ரீட் நன்றாகவே இருக்கிறது பெயர் போடுவதில் ஆரம்பித்து அனைத்தும் நன்றாகவே இருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.ஆனால்

பக்‌ஷிராஜன் பறவைகளுக்காகப் போராடுகின்றார். அவர் தரப்பில் ஒரு துளிகூட அநியாயம் இருப்பதாகப் படத்தில்கூட காட்டவில்லை. இறந்தபிறகு அந்த பவித்ரமான ஆத்மா எப்படிக் கொடூரமான ஆத்மாவாக மாறுகின்றது. ஆரா  கூற்றுப்படியும் இது எப்படி +வி பெரும் – வி வாக மாறுகின்றது. முரணாக, பறவைகள் மீது அன்புகொண்டு இறுதிக் காட்சிகளில் பக்‌ஷிராஜன் தடுமாறுகின்றார். அப்படியெனில், ஒவ்வொரு குடிமகனையும் ஏன் கொடூரமாகச் சிதைக்க வேண்டும்? இறுதிக்காட்சியில் வசீகரன் மொபைல் போன் பற்றிப் பேசுவதைக் கேட்க திரையரங்கத்தில் யாருமே இல்லை. சிட்டி, பக்‌ஷிராஜனை அழித்ததுமே படம் முடிந்துவிடுகின்றது. அதன் பிறகு சொல்லப்படுவதை யாரும் காதுகொடுத்துக் கேட்கப் போவதில்லை.

குழந்தைகளுக்கு என்ன புரியும்? செழியனிடம், பக்‌ஷிராஜன் யார்? என்று கேட்டேன். ‘அவர் ஒரு பேய்’ என்றான். நியாயத்திற்காகப் போராடினால் உனக்குக் கிடைப்பது இதுவே என்று குழந்தைகள் மனதில் பதியாதா? இது அறமாகுமா?

சரி, குழந்தைகள் படத்தினைப் பார்க்க வருவார்கள் என்று தெரியும்தானே… அவர்களைக் கவர ஏகப்பட்ட காட்சிகள் படத்தில் உண்டுதானே… பின்னர் எதற்கு இத்தனை வன்முறை? எதற்கு இத்தனைக் கொடூரம்? எதற்கு இத்தனை ரத்தக்காட்சிகளும் சிதறல்களும்? படத்தின் ஆரம்பத்திலேயே பயம் தொற்றிக்கொண்டபின்னர், குழந்தைகளால் எப்படி படத்தைப் பார்க்க முடியும்?

இவ்வாறான கருத்தை சிறுவர் எழுத்தாளர் விழியன் வெளியிட்டுள்ளார்.

From around the web