24 மணி நேரத்தில் 20 மில்லியன் பார்வையாளர்கள்: மாஸ்டர் செய்த மாஸ் சாதனை!

 

தளபதி விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படத்தின் டீசர் நேற்று மாலை 6 மணிக்கு வெளியான நிலையில் இன்று மாலை 6 மணிக்குள் அதாவது 24 மணி நேரத்தில் 20 மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் இந்த டீசரை பார்த்துள்ளனர் 

அதேபோல் மாஸ்டர் டீசர் 1.8 மில்லியனுக்கும் அதிகமான லைக்ஸ்களை பெற்றுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து இந்திய அளவில் ஒரு திரைப்படத்தின் டீசர் அதிக அளவில் லைக்ஸ்களையும் பார்வையாளர்களையும் பெற்றுள்ள திரைப்படம் மாஸ்டர் தான் என்ற சாதனையை இந்தப் படம் பெற்று உள்ளது. இதனை அடுத்து விஜய் மற்றும் லோகேஷ் கனகராஜ் உள்பட அனைத்து படக்குழுவினர் அனைவருக்கும் வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

ஏற்கனவே சர்க்கார், மெர்சல் ஆகிய இரண்டு விஜய் படங்களின் டீசர் சாதனை செய்துள்ள நிலையில் தற்போது அந்த படங்களின் டீசரின் சாதனையை மாஸ்டர் திரைப்படம் முறியடித்துவிட்டது என்பதும் விஜய் தனது படங்களின் சாதனையை தானே முறியடித்த வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்திய அளவில் வெளியாகும் பாலிவுட் படங்களை விட மாஸ்டர் படத்தின் டீசர் அதிக அளவில் லைக்ஸ்களை பெற்றுள்ளது பாலிவுட் திரையுலகினர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web