‘வெண்ணிலா கபடிக்குழு 2’ படத்தின் டைட்டில் அறிவிப்பு

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் இயக்குனரான சுசீந்திரன் மீண்டும் ”வெண்ணிலா கபடிக்குழு 2′ படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் முதல் பாகம் ஆண்கள் கபடி போட்டி குறித்த கதையாக இருந்த நிலையில் இந்த படம் பெண்கள் கபடி குறித்து அலசவிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டிலாக கென்னடி கிளப் என்ற டைட்டிலை சுசீந்திரன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார். இயக்குனர் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு மெலடி
 

‘வெண்ணிலா கபடிக்குழு 2’ படத்தின் டைட்டில் அறிவிப்பு

‘வெண்ணிலா கபடிக்குழு’ படத்தின் மூலம் இயக்குனரான சுசீந்திரன் மீண்டும் ”வெண்ணிலா கபடிக்குழு 2′ படத்தை இயக்கவுள்ளதாக சமீபத்தில் அறிவித்தார். ஆனால் முதல் பாகம் ஆண்கள் கபடி போட்டி குறித்த கதையாக இருந்த நிலையில் இந்த படம் பெண்கள் கபடி குறித்து அலசவிருக்கின்றது. இந்த நிலையில் இந்த படத்தின் அதிகாரபூர்வ டைட்டிலாக கென்னடி கிளப் என்ற டைட்டிலை சுசீந்திரன் சற்றுமுன்னர் அறிவித்துள்ளார்.

இயக்குனர் பாரதிராஜா, சசிகுமார், சமுத்திரக்கனி, காயத்ரி உள்ளிட்ட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு மெலடி கிங் டி.இமான் இசையமைக்கவுள்ளார். நல்லுசாமி பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

இந்த நிலையில் சுசிந்திரன் இயக்கிய ‘ஜீனியஸ்’ திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகவுள்ளது என்பதும் சுசீந்திரன் இயக்கி முடித்துள்ள இன்னொரு படமான ‘சாம்பியன்’ திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

From around the web