தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனை முந்திய விக்ரம்பிரபு

டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தினங்களில் கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பு திரைப்படங்களாக மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா, அடங்கமறு ஆகிய ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது. இந்த நிலையில் டிசம்பர் 21க்கு முந்தைய வாரமான டிசம்பர் 14ஆம் தேதி விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இந்த படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிடும் என்று உறுதியாக தெரிந்தும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணூ, தைரியமாக வெளியிடுகிறார் என்பது
 

தனுஷ், விஜய்சேதுபதி, சிவகார்த்திகேயனை முந்திய விக்ரம்பிரபு

டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய தினங்களில் கிறிஸ்துமஸ் திருவிழா சிறப்பு திரைப்படங்களாக மாரி 2, சீதக்காதி, சிலுக்குவார்பட்டி சிங்கம், கனா, அடங்கமறு ஆகிய ஐந்து திரைப்படங்கள் வெளியாகவுள்ளது.

இந்த நிலையில் டிசம்பர் 21க்கு முந்தைய வாரமான டிசம்பர் 14ஆம் தேதி விக்ரம் பிரபுவின் துப்பாக்கி முனை திரைப்படம் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஒரே வாரத்தில் இந்த படம் அனைத்து திரையரங்குகளில் இருந்து தூக்கப்பட்டுவிடும் என்று உறுதியாக தெரிந்தும் இந்த படத்தின் தயாரிப்பாளர் எஸ்.தாணூ, தைரியமாக வெளியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினேஷ் செல்வராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் விக்ரம்பிரபு, ஹன்சிகா உள்பட பலர் நடித்துள்ளனர். எல்.வி.முத்துகணேஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.

From around the web