‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் செட் அமைக்கும் பணியை கடந்த மாதமே கலை இயக்குனர் டி.முத்துராஜ் தொடங்கிவிட்டார். இதனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த படத்தின் செட் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை என்றும், இந்த பணி முடிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் மூன்று
 


‘இந்தியன் 2’ படப்பிடிப்பு திடீர் ஒத்தி வைப்பு!

கமல்ஹாசன் நடிப்பில் இயக்குனர் ஷங்கர் இயக்கவுள்ள ‘இந்தியன் 2’ திரைப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் 14ஆம் தேதி தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த படத்தின் செட் அமைக்கும் பணியை கடந்த மாதமே கலை இயக்குனர் டி.முத்துராஜ் தொடங்கிவிட்டார். இதனால் திட்டமிட்டபடி இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இந்த படத்தின் செட் அமைக்கும் பணி இன்னும் முடியவில்லை என்றும், இந்த பணி முடிய இன்னும் சில நாட்கள் ஆகும் என்பதால் இந்த படத்தின் படப்பிடிப்பை இன்னும் மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.

இருப்பினும் இந்த படத்தின் ஆரம்பகட்ட பணிகள் நடந்து வருகிறது. குறிப்பாக காஜல் அகர்வால் கேரக்டருக்கான பயிற்சி சென்னையில் நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.


From around the web