2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர்கள் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்கள் சற்று முன் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தை அடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார் திருச்சி, அரியலூர் என 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று
 

2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை: கலெக்டர்கள் அறிவிப்பு

வடகிழக்கு பருவமழை காரணமாக நேற்று இரவு முதல் தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. இதனை அடுத்து அரியலூர் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை என அம்மாவட்ட ஆட்சியர் ரத்னா அவர்கள் சற்று முன் அறிவித்திருந்தார் என்பது தெரிந்ததே

இந்த நிலையில் அரியலூர் மாவட்டத்தை அடுத்து திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கும் இன்று விடுமுறை என திருச்சி மாவட்ட ஆட்சியர் சற்றுமுன் அறிவித்துள்ளார்

திருச்சி, அரியலூர் என 2 மாவட்ட பள்ளிகளுக்கு இன்று விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் மற்ற மாவட்டங்களில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறையா? என்பது குறித்த அறிவிப்பு இன்னும் ஒரு சில நிமிடங்களில் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது

மேலும் நவம்பர் 30 மற்றும் டிசம்பர் 1 2 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பகுதிகளில் கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் எச்சரித்துள்ளது

இந்த மூன்று நாட்களுக்கும் தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை இருக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த மூன்று நாட்களில் அதிக அளவான கனமழை பெய்யும் என்பதால் குழந்தைகள் மற்றும் பெரியவர்கள் வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என்றும் அறிவுறுத்தப்படுகிறது

From around the web