மாரி 2 படத்தின் சிங்கிள் டிராக் 28ம் தேதி வெளியீடு

பாலாஜி மோகன் இயக்கிய மாரி 2 திரைப்படம் கடந்த 2015ம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்றது. தனுஷ் கதாநாயகனாக நடித்திருந்தார். காஜல் அகர்வால் கதாநாயகியாக நடித்திருந்தார்.
ரோபோ ஷங்கர் காமெடி செய்திருந்தார். அனிருத் இசையமைத்திருந்த இப்படத்தின் பாடல்கள் வரவேற்பை பெற்றன.
இந்நிலையில் மாரி 2 படத்தையும் பாலாஜி மோகனே இயக்கி வருகிறார். இம்முறை இசையமைப்பது அனிருத் அல்லாமல் யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.
நீண்ட இடைவேளைக்கு பிறகு வரும் யுவன், தனுஷ் காம்போ என்பதால் ஏற்கனவே வந்த காதல் கொண்டேன்,துள்ளுவதோ இளமை, யாரடி நீ மோகினி, புதுப்பேட்டை படங்கள் போல் இந்த படத்திலும் பாடல் பின்னணி இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து யுவன் இசையமைத்திருப்பதும் இக்கூட்டணி நீண்ட இடைவேளைக்கு பிறகு வருவதும் பாடல்கள் மீதான ஆர்வத்தை அதிகரித்துள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் முதல் சிங்கிள் டிராக் வரும் நவம்பர் 28ல் வெளியிடப்படுவதாக யுவன் தெரிவித்துள்ளார்.
#maari2 #rowdybaby rowdy single on nov 28th #Maari2Single pic.twitter.com/bjCNCfbsK4
— Raja yuvan (@thisisysr) November 26, 2018