வெறுப்பை தூண்டிய 17 ஆயிரம் சேனல்களை நீக்கியது யூ டியூப்

கூகுள் நிறுவனம்தான் யூ டியூப் சேவையை வழங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் இதன் பயன்பாடு பலருக்கு தெரியவில்லை. ஆரம்பத்தில் சினிமா படங்கள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், கோவில்கள் இது போல வீடியோக்கள் பதியப்பட்டு வந்தன. ஒரு கட்டத்தில் யூ டியூப் சேனலாக நீங்களாக நடத்தலாம் வித்தியாசமான கிரியேட்டி விட்டி வீடியோக்களுக்கு அதன் பார்வையாளர்களுக்கு ஏற்றபடி பணம் வழங்கும் முறையை கொண்டு வந்தது யூ டியூப் நிறுவனம். இதனால் நிறைய யூ டியூப் சேனல்கள் போட்டி போட்டு பெருகின.
 

கூகுள் நிறுவனம்தான் யூ டியூப் சேவையை வழங்கி வருகிறது. ஆரம்ப காலத்தில் இதன் பயன்பாடு பலருக்கு தெரியவில்லை. ஆரம்பத்தில் சினிமா படங்கள், பாடல்கள், நகைச்சுவை காட்சிகள், கோவில்கள் இது போல வீடியோக்கள் பதியப்பட்டு வந்தன.

வெறுப்பை தூண்டிய 17 ஆயிரம் சேனல்களை நீக்கியது யூ டியூப்

ஒரு கட்டத்தில் யூ டியூப் சேனலாக நீங்களாக நடத்தலாம் வித்தியாசமான கிரியேட்டி விட்டி வீடியோக்களுக்கு அதன் பார்வையாளர்களுக்கு ஏற்றபடி பணம் வழங்கும் முறையை கொண்டு வந்தது யூ டியூப் நிறுவனம்.

இதனால் நிறைய யூ டியூப் சேனல்கள் போட்டி போட்டு பெருகின. சில வீடியோக்கள், ஜாதி, மத, இன துவேசத்தை தூண்டும்படி இருந்தது. சில வீடியோக்கள் பாலியல் ரீதியான விசயங்களை உள்ளடக்கி இருந்தது.

இதனால் இதை கண்காணித்த கூகுள் நிறுவனம் இதுவரை இல்லாத அளவு 5 மடங்கு அதிக எண்ணிக்கையிலான வெறுப்புணர்வைத் தூண்டும் பேச்சுகள் அடங்கிய வீடியோக்களை நீக்கியுள்ளதாகத் தெரிவித்துள்ளது.

இது குறித்து கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மதம், சாதி, பாலினம், நிறம் ஆகியவற்றுக்கு எதிராக வெறுப்புணர்வைத் தூண்டும் வகையிலான 1 லட்சம் வீடியோக்களையும், 17 ஆயிரம் சேனல்களையும், 500 மில்லியன் கமெண்ட்களையும் யூடியூபிலிருந்து நீக்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளது.

கடந்த முறை யூ டியூப் இது போல அதிரடி நடவடிக்கை எடுத்ததை விட இம்முறை 5மடங்கு சேனல்கள், வீடியோக்களை அதிகமாக நீக்கியுள்ளதாம்.

From around the web