14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி!!

விளம்பர மாடலாக கல்லூரி படிக்கும்போது இருந்து வந்த நடிகை பிந்து மாதவிக்கு 2008 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுகப்படம் ஹிட் ஆக, தொடர் வாய்ப்புகளைப் பெற்று வந்தார். அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெப்பம் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். வெப்பம் படத்தினைத் தொடர்ந்து இவர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சவாளே
 
14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி!!

விளம்பர மாடலாக கல்லூரி படிக்கும்போது இருந்து வந்த நடிகை பிந்து மாதவிக்கு 2008 ஆம் ஆண்டு தெலுங்கு சினிமாவில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அறிமுகப்படம் ஹிட் ஆக, தொடர் வாய்ப்புகளைப் பெற்று வந்தார்.

அதன்பின்னர் 2011 ஆம் ஆண்டு தமிழில் வெளியான வெப்பம் படத்தின்மூலம் தமிழ் சினிமாவில் கால் பதித்தார். வெப்பம் படத்தினைத் தொடர்ந்து இவர் கழுகு, கேடி பில்லா கில்லாடி ரங்கா, தேசிங்கு ராஜா, வருத்தப்படாத வாலிபர் சங்கம், தமிழுக்கு எண் ஒன்றை அழுத்தவும், சவாளே சமாளி, கழுகு 2 போன்ற படங்களில் நடித்துள்ளார்.

14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்ட நடிகை பிந்து மாதவி!!

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் முதல் பாகத்திலும் அவர் கலந்து கொண்டுள்ளார். பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் இவருக்கு பெரிய அளவில் ரசிகர் பட்டாளம் உருவானது. மூலம் பிரபலமானார்.

தற்போது இவர் 14 நாட்களில் வீட்டிற்குள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அதாவது அந்தத் தகவலை அவரே ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

நடிகை பிந்துமாதவி ட்விட்டரில் பதிவிட்டதாவது, “நாங்கள் வசிக்கும் அடுக்குமாடி குடியிருப்பில் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது, இதனால் மாநகராட்சி ஊழியர்கள் எங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளனர்” என்று பதிவிட்டுள்ளார்.

From around the web