இன்று நள்ளிரவு 12.10க்கு சூர்யா பட அப்டேட்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வராததால் வெறுப்பில் உள்ள சூர்யா ரசிகர்களுக்கு ‘சூர்யா 37’ படக்குழுவினர் அவ்வப்போது அப்டேட்டுக்களை வெளியிட்டு ஆறுதல் கூறி வருகின்றனர். அந்த வகையில் ‘சூர்யா 37’ படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த் நாளை அதாவது ஜனவரி 1ஆம் தேதி சரியாக 12.10க்கு ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏற்கனவே ‘உயிர்கா’ என்ற டைட்டிலை தேர்வு
 


இன்று நள்ளிரவு 12.10க்கு சூர்யா பட அப்டேட்

நடிகர் சூர்யாவின் நடிப்பில் இயக்குனர் செல்வராகவன் இயக்கி வரும் ‘என்.ஜி.கே படம் குறித்த எந்தவித அப்டேட்டும் வராததால் வெறுப்பில் உள்ள சூர்யா ரசிகர்களுக்கு ‘சூர்யா 37’ படக்குழுவினர் அவ்வப்போது அப்டேட்டுக்களை வெளியிட்டு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அந்த வகையில் ‘சூர்யா 37’ படத்தை இயக்கி வரும் கே.வி.ஆனந்த் நாளை அதாவது ஜனவரி 1ஆம் தேதி சரியாக 12.10க்கு ‘சூர்யா 37’ படத்தின் டைட்டிலை அதிகாரபூர்வமாக அறிவிக்கவுள்ளார். இந்த படத்திற்கு ரசிகர்கள் ஏற்கனவே ‘உயிர்கா’ என்ற டைட்டிலை தேர்வு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மோகன்லால் பிரதமராக நடித்து வரும் இந்த படத்தில் சூர்யா பிரதமரின் பாதுகாவலராக நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில் சாயீஷா, ஆர்யா, பொமன் இரானி, சமுத்திரக்கனி உள்பட பலர் நடித்து வருகின்றனர்.


From around the web