சீனாவில் சிவகார்த்திகேயன் படம்! ரூ.100 கோடி வசூலிக்கும் என தகவல்

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ திரைப்படம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பெரும் போட்டிகளுக்கு இடையே வெளியாகி நம்பன் ஒன் வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து பார்ப்பதால் வரும் பொங்கல் தினம் வரை வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் இந்த படம் விரைவில் கேரளாவில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ‘தங்கல்’
 


சீனாவில் சிவகார்த்திகேயன் படம்! ரூ.100 கோடி வசூலிக்கும் என தகவல்

சிவகார்த்திகேயன், ஐஸ்வர்யா ராஜேஷ், சத்யராஜ் நடிப்பில் அருண்ராஜா காமராஜ் இயக்கிய ‘கனா’ திரைப்படம் கடந்த டிசம்பர் 21ஆம் தேதி பெரும் போட்டிகளுக்கு இடையே வெளியாகி நம்பன் ஒன் வசூலை பெற்றது. இந்த படத்திற்கு பள்ளி, கல்லூரி மாணவிகள் கூட்டம் கூட்டமாக வந்து பார்ப்பதால் வரும் பொங்கல் தினம் வரை வெளியாகும் என தெரிகிறது.

இந்த நிலையில் இந்த படம் விரைவில் கேரளாவில் ரிலீஸ் ஆகவுள்ளது. அதற்கான பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படம் ‘தங்கல்’ போன்று விளையாட்டு சம்பந்தப்பட்ட படமாக இருப்பதால் சீனாவிலும் வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர்.

‘தங்கல் திரைப்படம் சீனாவில் மட்டும் ரூ.1000 கோடி வசூல் செய்த இந்த ‘கனா’ திரைப்படம் குறைந்தபட்சம் ரூ.100 கோடி வசூலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு ஏழை விவசாயியின் மகள் விளையாட்டில் வெற்றி பெறும் கதையை சீனர்கள் விரும்பி பார்ப்பார்கள் என்பதால் இந்த படம் சீனாவில் மிகப்பெரிய வெற்றியை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.


From around the web