100% இருக்கைகளுக்கு அனுமதி: தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்த தயாரிப்பாளர் சங்கம்!

 

தமிழகத்தில் திரையரங்குகள் ஏழு மாதங்களுக்குப் பின்னர் திறக்கப்பட்டும் பார்வையாளர்களின் கூட்டம் வராததால் மீண்டும் பல திரையரங்குகள் மூடப்பட்டதாக கூறப்பட்டது. அதுமட்டுமின்றி புதிய படங்கள் குறிப்பாக பெரிய நடிகர்களின் படங்கள் வராததும் திரையரங்குக்கு கூட்டம் வராததற்கு காரணம் என்றும் சொல்லப்பட்டது 

இந்த நிலையில் தளபதி விஜய்யின் மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் வெளிவந்தால் மட்டுமே மீண்டும் திரையரங்குகளில் இயல்பு நிலை திரும்பும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த வகையில் தற்போது மாஸ்டர் திரைப்படம் வெளியாக உள்ள நிலையில் திரையரங்குகளில் 100 சதவீதம் இருக்கைகளுக்கு தமிழக அரசு அனுமதி அளித்து அதற்கான அரசாணையும் வெளியிட்டது என்பதை ஏற்கனவே பார்த்தோம் 
இந்த நிலையில் தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் நன்றி தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

theater

தமிழ் திரை உலகிற்கு எண்ணற்ற சலுகைகளை வழங்கி வரும் மாண்புமிகு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் மாண்புமிகு கடம்பூர் ராஜு அவர்களும் திரையரங்குகளில் 50 சதவீத பார்வையாளர்கள் மட்டுமே படம் பார்த்து வந்த நிலையில் தற்போது 100 சதவீத பார்வையாளர்கள் படம் பார்ப்பதற்கு அனுமதி அளித்து ஆணை பிறப்பித்துள்ளார்கள்

இன்று நிலவிவரும் தமிழ் திரையுலகின் அசாதாரண சூழ்நிலையில் இருந்து தொழில் பாதுகாப்பு அளித்து தக்க தருணத்தில் இந்த அனுமதி அளித்ததற்கு மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்களுக்கும், மாண்புமிகு செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் அவர்களுக்கும் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பிலும் தமிழ் திரை உலகம் சார்பிலும் எங்கள் கோடான கோடி நன்றியை தெரிவித்து கொள்கிறேன் என்று அறிவிக்கப்பட்டுள்ளது

இதேபோல் நடப்பு தயாரிப்பாளர் சங்கமும் தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web