திரையரங்குகளில் 100% இருக்கைகளுக்கு அனுமதி: தமிழக அரசு அரசாணை!

 

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் ஏழு மாதங்கள் திரையரங்குகள் மூடப்பட்டிருந்த நிலையில் சமீபத்தில் தான் திரையரங்குகள் திறக்க அனுமதி அளிக்கப்பட்டது. இருப்பினும் திரையரங்குகளில் 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் தயாரிப்பாளர்கள், திரையரங்க உரிமையாளர்கள் ஆகியோர் தமிழக அரசிடம் 100% இருக்கைகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். சமீபத்தில் தமிழக முதல்வரை சந்தித்த நடிகர் விஜய்யும் இதே கோரிக்கையை முன்வைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதுமட்டுமின்றி சற்று முன்னர் நடிகர் சிம்பு தனது அறிக்கை ஒன்றில் தமிழக முதல்வருக்கு இதனை ஒரு கோரிக்கையாக வைத்திருந்தார் 

master easwaran

இந்த நிலையில் திரையுலகினரின் கோரிக்கையை பரிசீலித்த தமிழக அரசு சற்று முன்னர் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது. இதனை அடுத்து பொங்கல் தினத்தில் வெளியாகும் விஜய்யின் மாஸ்டர் மற்றும் சிம்புவின் ஈஸ்வரன் ஆகிய படங்களுக்கு 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

From around the web