100 மில்லியன் வியூஸ்! ரசிகர்கள் கொண்டாட்டம்..,

100 மில்லியன் வியூஸை பெற்றது பிரபல நடிகரின் பாடல்...,
 
100 மில்லியன் வியூஸை பெற்ற சூர்யா பாடல்..!

திரையரங்குகளில் வெளியாகும் என எதிர்பார்த்த நிலையில் கொரோனா அச்சுறுத்தலால்  திரையில் வெளியாகாமல்  ஓ.டி.டியில் வெளியாகி பயங்கரமாக பேசப்பட்ட திரைப்படம் சூரரைப்போற்று. இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா நடித்திருப்பார். இத்திரைப்படத்தில் அவரின் நடிப்பு அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. இத்திரைப்படத்தில் இவருக்கு ஜோடியாக "நடிகை அபர்ணா பாலமுரளி" நடித்திருந்தார். மேலும் இத்திரைப்படத்தில் காமெடி நடிகர் கருணாஸ் மற்றும் காளி வெங்கட் நடித்திருந்தார்கள். இத்திரைப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் "ஜீ.வி பிரகாஷ்" இசையமைத்துள்ளார்.

NGK

இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷின் இசையில் வெளியாகியிருந்த "அசுரன்" என்ற திரைப்படம் பயங்கரமாக ஓடி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்தது. அசுரன் திரைப்படத்தில் "நடிகர் தனுஷ்" நடித்து இருந்தார். அவரது நடிப்பு மக்களை வெகுவாக கவர்ந்தது.மேலும் நடிகர் தனுஷ் நடித்து இருந்த "ஆடுகளம்" என்ற   வெற்றிப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் தான் இசையமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் சூர்யா அடித்திருந்த "என்.ஜி.கே" என்ற திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றது இத்திரைப்படத்தில் "மலர் டீச்சர்" என்று அழைக்கப்படும் "நடிகை சாய் பல்லவி" நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் "அன்பே பேரன்பே" என்ற பாடல் வைரலாக பரவியது. மேலும் இப்பாடல் இன்றளவும் பலரின் மொபைல் போனில் ரிங்டோனாகவே உள்ளது. தற்போது இந்தப் பாடல் "நூறு மில்லியன் வியூஸை" எட்டியது. இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளார்கள்.

From around the web