"100 டேஸ் ஆப் சூரரை போற்று!"

"100 நாள் எட்டியது சூரரைப் போற்று திரைப்படம்!"
 
நடிகர் காளி வெங்கட் டுவிட்டர் பக்கம் கூறும் தகவல்!

குணசித்திர நடிகரும், காமெடி நடிகரும், துணை நடிகரும், ஆகிய பல்வேறு முகங்களை கொண்டவர் "நடிகர் காளி வெங்கட்". அசுரன் நாயகனான நடிகர் தனுஷுடன் "கொடி" என்ற திரைப்படத்தில் நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அவரின் கதாபாத்திரம் அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது.

kaali venkat

மேலும் இவர் பிரபல நடிகரான விஷ்ணு விஷாலின் "ராட்சன்"," முண்டாசுப்பட்டி" என்ற இரு திரைப்படங்களில் நடித்துள்ளார். இந்த இரு திரைப்படங்களும் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பையும் வெற்றியையும் கண்டது. நடிகர் காளி வெங்கட் நடிப்பில் வெளியாகிய "ராஜா மந்திரி"  திரைப்படம் மக்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.

சில நாட்களுக்கு முன்பு இவர் நடிப்பில் வெளியாகிய திரைப்படம் "சூரரைப்போற்று". இத்திரைப்படத்தில் நடிப்பின் நாயகன் சூர்யா நடித்து இருந்தார். இத்திரைப்படம் மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்றது. மேலும் இத்திரைப்படத்தில் நடிகர் சூர்யா மிகவும் தத்ரூபமாக நடித்துள்ளார். தற்போது "சூரரைப்போற்று" திரைப்படம்  வெளியாகி நூறு நாட்களை எட்டியது. இதனால் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்திலும் கொண்டாட்டத்திலும் உள்ளனர். மேலும் நடிகர் காளி வெங்கட் தனது ட்விட்டர் பக்கத்தில் இத்திரைப்படத்தின் 100 நாள் ஓடிய போஸ்டர் ஒன்றை ஷேர் செய்துள்ளார். இதனை காணும் இவரின் ரசிகர்கள் மற்றும் நடிகர் சூர்யாவின் ரசிகர்கள் மிகுந்த ஆனந்தத்தில் உள்ளனர்.

From around the web