100 கோடி பார்வையாளர்கள்: ரவுடி பேபி சாதனையில் சாய் பல்லவி ரசிகர்கள் அதிருப்தி 

 

சமீபத்தில் தனுஷ் நடித்த மாரி 2 படத்தில் இடம்பெற்ற ரவுடி பேபி என்ற பாடல் நூறு கோடி பார்வையாளர்களை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து இது குறித்து காமண்டிபி போஸ்டர் ஒன்றும் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய அளவில் வைரலானது

இந்தப் பாடல் சூப்பர் ஹிட் ஆனதற்கு பல காரணங்கள் உண்டு. தனுஷ் மற்றும் சாய்பல்லவியின் அபாரமான நடனம், பிரபுதேவாவின் அற்புதமான நடன இயக்கம் மற்றும்  ஒளிப்பதிவாளர் ஓம் பிரகாஷின் அபாரமான ஒளிப்பதிவு மற்றும் பாடகர்கள் ஆகியோர்களும் இந்த பாடலின் வெற்றிக்கு காரணம் என்பது குறிப்பிடத்தக்கது 

rowdy baby

ஆனால் இந்த பாடல் நூறு கோடி பார்வையாளர்களை பெற்றதும் வெளியான காமண்டிபி போஸ்டரில் தனுஷ் புகைப்படம் மட்டுமே இருந்தது. சாய்பல்லவி உள்பட இந்தப் பாடலுக்காக பணிபுரிந்த அனைவரது பெயர்களும் இருட்டடிப்பு செய்யப்பட்டன என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் சாய்பல்லவி ரசிகர்கள் மிகவும் அதிருப்தி அடைந்துள்ளனர் 

ஒரு பாடலின் வெற்றிக்கு தனுஷ் மட்டுமே பெருமைப்பட்டுக் கொள்வது எந்த வகையில் நியாயம் என்று சாய்பல்லவி ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர் இதனால் சமூக வலைதளங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

From around the web