10 ம் தேதியே வெளிவரும் பொங்கல் படங்கள்

பொங்கலுக்கு இரண்டு மாஸான நடிகர்களின் படங்கள் வெளிவருகிறது. ஒன்று ரஜினிகாந்தின் படமான பேட்ட மற்றொன்று தல அஜீத்தின் விஸ்வாசம் இரண்டு படங்களும் பொங்கலுக்கு முன்னதாகவே 10ம் தேதியே வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இரண்டு படங்களின் விநியோகஸ்தர்களிடமுமே ஒரே நாளில் வந்தால் மட்டுமே சரியாக இருக்கும் என்று உறுதிபடத் தெரிவித்துள்ளனர். எந்த தேதியில் வெளியீடு என்பதிலும் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. இறுதியாக, ஜனவரி 10-ம் தேதி வரலாம் என்று பேசி முடித்து, உறுதி செய்துள்ளனர்.
‘விஸ்வாசம்’ உரிமையைக் கைப்பற்றியுள்ள கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ், ‘பேட்ட’ உரிமையைக் கைப்பற்றியுள்ள ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனங்கள் படுஜோராக திரையரங்குகள் ஒப்பந்தத்தைத் தொடங்கியுள்ளன. எந்தப் படத்துக்கு அதிகப்படியான திரையரங்குகள் என்பது இன்னும் சில நாட்களில் தெரியவரும்.