சினிமாவில் அறிமுகமான கார்த்திக்….. தந்தை முத்துராமன் என்ன செய்தார் தெரியுமா….?

Published:

நவரச நாயகன் கார்த்திக் மாபெரும் நடிகரான முத்துராமனின் மகனாக இருந்தாலும் ஒரு சாதாரண சைக்கிளில் கல்லூரிக்கு செல்லும் மாணவராக தான் இருந்தார் பாரதிராஜா புது முகங்களை அந்தந்த இடங்களில் தேர்வு செய்து தனது படத்தில் நடிக்க வைப்பவர் அப்படிதான் அவரது கண்ணில் கார்த்திக்கும் தென்பட்டுள்ளார் கல்லூரி வாசலில் வைத்து கார்த்திக்கை பார்த்த பாரதிராஜா தான் எடுக்க போகும் அலைகள் ஓய்வதில்லை படத்திற்கு கதாநாயகனாக இவர் தான் சரியாக இருப்பார் என முடிவு செய்தார்.

இதையடுத்து கார்த்திக்கின் பின்னணி பற்றி விசாரித்த போது பிரபல நடிகரான முத்துராமனின் மகன் என்பதை தெரிந்து கொண்டார். முத்துராமனிடம் சென்று அவரது மகன் கார்த்திக்கை தனது படத்தில் நடிக்க வைக்க அனுமதி கேட்டுள்ளார் பாரதிராஜா. அதற்கு முதலில் மறுப்பு தெரிவித்த முத்துராமன் பின்னர் தனக்கு நன்றாக பழக்கப்பட்ட செய்தியாளர்கள் சிலரை அழைத்து ஆலோசனை கேட்டுள்ளார். அதற்கு அப்போதைய செய்தியாளர்களும் கார்த்திக்கை சினிமாவில் அறிமுகப்படுத்தலாம் என்று கூறியுள்ளனர்.

maxresdefault 1 1

அதன் பிறகு கார்த்திக் பாரதிராஜாவின் அலைகள் ஓய்வதில்லை படத்தில் நடித்தார். அந்த படத்திற்கான செய்தியாளர்கள் சந்திப்பின்போது முத்துராமன் செய்தியாளர்களிடம் கார்த்திகை உங்களிடம் தான் ஒப்படைக்கிறேன் என்று கூறியுள்ளார். இந்த ஒரு வார்த்தைக்காக கார்த்திக் மீது அதன் பிறகு வெவ்வேறு காலகட்டங்களில் வந்த செய்திகளைக் கூட பத்திரிக்கையாளர்கள் அதிகம் வெளியிடவில்லை. இந்த அலைகள் ஓய்வதில்லை படத்திற்காக சிறந்த அறிமுக நாயகன் விருது கார்த்திக்கிற்கு கிடைத்தது.

அதன் பிறகு சில படங்கள் அவருக்கு சரியானதாக அமைந்தது. ஆனால் அடுத்தடுத்ததாக அவர் தேர்ந்தெடுத்த கதைகள் கார்த்திக்கிற்கு வெற்றியை கொடுக்கவில்லை. இந்த நிலையில் ஏவிஎம்மில் இருந்து நல்லவனுக்கு நல்லவன் திரைப்படத்தின் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க கார்த்திக்கை அழைத்துள்ளனர். அதற்கு கார்த்திக் வில்லன் கதாபாத்திரம் பண்ண முடியாது என்று உறுதியாக கூறியுள்ளார். அப்போது நல்லவனுக்கு நல்லவன் படத்தில் வில்லன் என்றால் பெரிய தவறு செய்ய வேண்டும் என்று கிடையாது.

35c1807c 1599933037114

ரஜினி அவர்களுக்கு மருமகனாக நடிக்க வேண்டும் என்றும் படத்தின் முடிவில் இருவரும் ஒன்றிணைந்து விடுவீர்கள் என்று கூறியதும் நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். கார்த்திக்கின் வாழ்வில் திருப்புமுனையாக அமைந்த படம் என்றால் மௌன ராகம் தான். இந்த படத்தில் பத்து நிமிடம் மட்டுமே கார்த்திக் வந்திருப்பார். ஆனால் அந்தப் படத்தை ரசிகர்கள் பலரும் கார்த்திக்கிற்காக பார்த்தார்கள் என்று கூறலாம். இன்று வரை அந்த படத்தில் கார்த்திக் கூறிய மிஸ்டர் சந்திரமௌலி என்பது ரசிகர்களிடையே நிலைத்து நிற்கிறது.

நடிகர் கார்த்திக் ஆரம்ப காலத்தில் கிராமப் புறத்தை மையமாக வைத்து எடுக்கப்படும் படங்களை தேர்வு செய்து வந்தார். ஆனால் சில கிராமப்புற படங்களில் கார்த்திக் தான் இன்னார் என்று வெளிப்படையாக தெரியும் விதமாக நடித்திருந்ததால் குறிப்பிட்ட சிலர் அவரை தூக்கி வைத்துக் கொண்டாட தூங்கினர். 2000 ஆம் ஆண்டிற்கு பிறகு திரைப்படங்களில் நடிப்பதை படிப்படியாக குறைக்க தொடங்கினார் கார்த்திக். 2000ம் ஆண்டில் வருடத்திற்கு ஐந்து படங்கள் என நடித்தவர் அதன் பிறகு வருடத்திற்கு ஒரு படம் என்று குறைத்துக் கொண்டார்.

images 1 2

புதிய நடிகர்களின் வருகை காரணமாக கார்த்திக்கின் வசூல் குறைய தொடங்கியது. சினிமாவில் தனக்கு கிடைத்த ரசிகர் பட்டாளத்தை நல்ல முறையில் பயன்படுத்த நினைத்த கார்த்திக் 2004 – 2005 காலகட்டத்தில் சரணாலயம் என்ற அமைப்பை தொடங்கினார். இந்த அமைப்பை தன் சமூகத்தை சேர்ந்தவர்களுக்கு உதவுவதற்காகவே தொடங்கியதாகவும் கார்த்திக் கூறியுள்ளார். அதன் பிறகு கார்த்திக் அரசியலில் இறங்கினார். ஆனால் அதுவும் அவருக்கு வெற்றியை கொடுக்கவில்லை.

திமுகவுடன் கூட்டணி அமைக்க முயற்சித்த போது கார்த்திக் கேட்ட இடங்களை கொடுக்காததால் கூட்டணி அமையவில்லை. தனியாக அரசியலில் நின்ற அவருக்கு 15 ஆயிரம் வாக்குகள் மட்டுமே கிடைத்தது. அரசியலில் கார்த்திக் தோல்வியை சந்தித்து இருந்தாலும் சினிமா அவருக்கு என்றும் தோல்வியை கொடுக்கவில்லை. நவரச நாயகனான கார்த்திக் ஈடாக இதுவரை வேறு எந்த நடிகரும் இல்லை என்றே கூறலாம்.

மேலும் உங்களுக்காக...