சசிகலா வருகை: இது அவர்களின் தனிப்பட்ட கருத்து; நான் சொன்னால் தவறாகிவிடும்!

தற்போது எதிர்கட்சியாக உள்ள அதிமுக கட்சியில் அதிகளவு அதிர்ச்சியான காரியங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. குறிப்பாக சசிகலா வருகையால் அதிமுக ஆட்சியில் அதிகம் குழப்பங்கள் உருவாகியுள்ளது. சசிகலா

இவ்வாறிருக்கையில் தமிழகத்தில் அதிமுக கூட்டணியில் பாஜக உள்ளது. தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை இன்றைய தினம் கோவை மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது அவரிடம் சசிகலா விவகாரம் குறித்து கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பதிலளித்தார். அதன்படி நாங்கள் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.அதிமுகவுடன் கூட்டணி தொடர்பான அனைத்து விவகாரங்களையும் பாராளுமன்ற முடிவெடுக்கிறது என்றும் அவர் கூறினார்.

நாங்கள் ஓபிஎஸ் ஈபிஎஸின் அதிமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என்று தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை  கூறினார்.

மேலும் சசிகலா குறித்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவர்கள் முடிவு எடுத்துக் கொள்வார்கள் என்றும், அது குறித்து இந்த நேரத்தில் நான் கூறினால் தவறாகிவிடும் என்றும் தமிழ் மாநில பாஜக தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment