Connect with us

அல்டிமேட் ஆன ரெசிபியோடு பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் போகும் போட்டியாளர்…..

bigg boss ultimate

பொழுதுபோக்கு

அல்டிமேட் ஆன ரெசிபியோடு பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் போகும் போட்டியாளர்…..

அல்டிமேட் ஆன ரெசிபியோடு பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் போகும் போட்டியாளர்…..

கடந்த பத்து நாளுக்கு முன்புதான் தமிழகத்தில் பிக் பாஸ் சீசன் 5 கிராண்ட் பினாலே நடந்து முடிந்தது. இதில் ராஜு வெற்றியாளராக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். இரண்டாவது இடத்தை பிரபல தொகுப்பாளினி பிரியங்கா பெற்றார்.

பிக் பாஸ் சீசன் 5 முடிந்து மக்கள் பலரும் சோகத்தில் இருந்த நிலையில் பிக் பாஸ் தனது மீண்டும் ஒரு உத்தியை கையில் எடுத்துள்ளது. அதற்கு பிக்பாஸ் அல்டிமேட் என்றும் பெயர் இடப்பட்டுள்ளது. அதன்படி பிக்பாஸ் அல்டிமேட் ஜனவரி 30-ஆம் தேதி முதல் நடைபெறும் என்றும் கூறப் படுகிறது.

இதனை டிஸ்னிபிளஸ் ஹாட்ஸ்டார் இணையதளத்தில் கண்டு மகிழலாம். இதில் சிறப்பம்சம் என்னவென்றால் 24 மணி நேரமும் ஒளிபரப்பாவது தான். இதில் கடந்த ஐந்து சீசன்களில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பங்கேற்க உள்ளனர்.

அதுவும் குறிப்பாக வனிதா, ஜூலி போன்ற சுவாரஸ்யத்தை அதிகப்படுத்தும் போட்டியாளர்கள் இதில் பங்கேற்றுள்ளனர். இந்த நிலையில் இவர்களுக்கு போட்டியாக பிக் பாஸ் சீசன் 4ல் தனது பங்கிற்கு பல்வேறு சுவாரசியத்தைக் கொடுத்த சுரேஷ் சக்ரவர்த்தி கலந்து கொள்ள உள்ளார். அவர் அல்டிமேட் ஆன ரெசிபி ஓடத்தான் பிக்பாஸ் அல்டிமேட்டிற்குள் போவேன் என்று கூறிய ப்ரோமோ இணையதளத்தில் வைரலாக பரவுகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in பொழுதுபோக்கு

To Top