என்ன கிழமையில் எந்த கடவுளை வணங்க வேண்டுமென தெரியுமா?!

கடவுளை வணங்க நேரம், காலம், நாள், நட்சத்திரம் என எதுவும் பார்க்க தேவையில்லை. ஆனால், அந்தந்த நாள், கிழமை, நட்சத்திரத்துண்டான கடவுளை வணங்கினால் கூடுதல் பலன்களை பெறலாம்.

 வாரத்தின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு கடவுளுக்கென அர்பணிக்கப்பட்டுள்ளது. உதாரணத்திற்கு திங்கள் என்றால் அது சிவனுக்கு உகந்த தினமாகும். அதேப்போல் செவ்வாய் என்றால் அனுமன் மற்றும் புதன் என்றால் விநாயகர்என தனித்தனியாக ஒவ்வொரு கடவுளுக்கென நாட்கள் ஒதுக்கப்பட்டுள்ளது.   அதனால் எந்த கடவுளை எந்த நாளன்று தரிசிக்க வேண்டும் என்பதை அறிந்து வழிபட்டு வாழ்வில் வெற்றி பெறலாம்.

7103011e82855ca5820dbac6f1912c51

திங்கள் கிழமைகளில் சிவன் கோவில்களில் அதிகளவிலான கூட்டங்களை காணலாம்,  நீலகண்டனை வழிபட அதுவே உகந்த நாளாக கருதப்படுகிறது. அன்றைய தினம், சிவபெருமானுக்கு பால், அரிசி மற்றும் சர்க்கரையை படைத்திடுங்கள்.

c6ad20cf47ead4fa9fd3626b1f2ccb6a

செவ்வாய் கிழமைகளில் அனுமனை வணங்க உகந்தது. 
 பலத்தின் கடவுளாக கருதப்படும் இவர் சிவபெருமானின் அவதாரமாக நம்பப்படுகிறார்.

 

e1f7f683eea7c75ab5726a2424174841

புதன் கிழமைகளில் விநாயகரை வணங்கலாம். அனைத்து தடங்களையும் நீக்கும் வல்லவர் விநாயகர். அவரை வழிபட புதனே உகந்த தினமாக கருதப்படுகிறது.

200be81b85a952e8296079746edd2c93

வியாழன் அன்று விஷ்ணு பகவானை வழிபட வேண்டும்.
 விஷ்ணு பகவானின் மனைவியான லட்சுமி தேவியை வணங்கவும் இதுவே உகந்த நாளாக பார்க்கப்படுகிறது. நற்பேறு மற்றும் செல்வம் நிறைந்துள்ள கடவுள்களை வியாழக்கிழமையில் வணங்குவது உகந்ததாக கருதப்படுகிறது. ஞானம் அருளும் தட்சிணாமூர்த்தி, குருபகவானை வணங்கவும் இந்நாள் உகந்தது.

122e71fab0105ed857b9452121d548ba

வெள்ளிக்கிழமைகள் பெண்தெய்வங்களின் வழிபாட்டுக்கு உகந்தது. அதிலும் துர்க்கை அம்மனை வணங்குவது கூடுதல் பலன்களை தரும். துர்க்கை அம்மனையும் அவரது அவதாரங்களையும் வெள்ளிக்கிழமை வழிபட வேண்டும். இந்த நாளில் அம்மனின் அனைத்து அவதாரங்களையும் ஒன்றாகவும் வழிபடலாம்.

6036a2896e559fc7c4177cbc7f2da293

சனிக்கிழமை என்பது சனி கிரகத்தை சார்ந்ததாகும். அந்த கிரகத்தை ஆட்சி செய்வது சனி பகவான் என நம்பப்படுகிறது. சனிக்கிழமைகளில் சனி பகவான், ஆஞ்சநேயர் , பெருமாள் மற்றும் காளி தேவியை வணங்கலாம்.

11c5f72a2a57b7003f290a897ec02a49

ஞாயிற்று கிழமைகளில் 
நவகிரகத்தின் முதன்மையான புகழ் பெற்ற கடவுளான சூரிய பகவானை வழிபடுவது உகந்தது. அந்நாளில் காலை வேளையில், சூரியனுக்கு தண்ணீர் படைத்து, காயத்ரி மந்திரம் படிக்க மறந்து விடாதீர்கள். சூரியனே உலக இயக்கத்துக்கு காரணமானவர்.

இதில்லாமல் ஏகாதசி திதியில் பெருமாளையும், சதுர்த்தியில் வினாயகரையும், கிருத்திகையில் முருகனையும், பிரதோசத்தில் நந்தி பகவானையும், அஷ்டமியில் கால பைரவரையும் வணங்குதல் வேண்டும். 

நம்புங்கள்! நல்லதே நடக்கும்!!

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews