அதிரடி காட்டிய ஹர்திக் பாண்டியா; 259 ரன்களுக்கு இங்கிலாந்து ஆல் அவுட்.!!

நம் இந்திய கிரிக்கெட் அணி தற்போது இங்கிலாந்து சுற்றுக்கான மேற்கொண்டுள்ளது. இந்த சுற்று பயணத்தில் 3/20 ஓவர் போட்டிகள் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் கொண்ட தொடர்கள் நடைபெற்று கொண்டு வருகிறது.

இதில் ஏற்கனவே 20 ஓவர் போட்டிக்கான தொடரை இந்தியா இரண்டுக்கு ஒன்று என்ற கணக்கில் வெற்றி பெற்றது. இந்த நிலையில் தற்போது 50 ஓவர் போட்டிக்கொண்ட தொடர் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று கொண்டு வருகிறது.

ஏனென்றால் முதல் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. இரண்டாவது போட்டியில் இங்கிலாந்து அணி அபாரமாக வெற்றி பெற்றது. இதனால் மூன்றாவது போட்டியில் வெற்றி பெற்றால் தொடரை வென்று விடலாம் என்ற முயற்சியில் இரண்டு அணிகளும் தீவிரமாக பயிற்சி பெற்றனர்.

இந்த போட்டியானது இன்றைய தினம் நடைபெற்றது. இதில் டாசை வென்ற இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பந்துவீச்சை தேர்வு செய்தார். இதனால் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி வரிசையாக தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்து வந்தது.

இருப்பினும் ஆட்டத்தின் நிலையில் அணியின் கேப்டன் ஜாஸ் பாட்லர் 60 ரன்கள் விலாசி ஓரளவிற்கு தக்க வைத்தார். ஆயினும் கூட தற்போது வெறும் 45.5 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 259 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளது.

இந்திய அணியில் அதிகபட்சமாக ஹர்திக் பாண்டியா நாலு விக்கெட் விலாசி சாதனை படைத்துள்ளார். இருப்பினும் கூட 260 என்ற இலக்கை இந்திய வீரர்கள் போராடித் தான் முறியடிக்க முடியும் என்பது போல் இங்கிலாந்து அணியின் பந்துவீச்சாளர்கள் காணப்படுகின்றனர்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews

இதையும் பாருங்கள்...