பிரதமர் மனைவிக்கு ஒரே நாளில் ரூ.500 கோடி இழப்பு.. என்ன நடந்தது?

இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மனைவிக்கு ஒரே நாளில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளன.

இங்கிலாந்து பிரதமராக இந்தியா வம்சாவளியைச் சேர்ந்த ரிஷி சுனக் சமீபத்தில் பொறுப்பேற்றார் என்பது தெரிந்ததே. அவருடைய மனைவி இந்திய தொழில் அதிபர் இன்போசிஸ் நாராயண மூர்த்தியின் மகள் அக்ஷதா மூர்த்தி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் நேற்று இன்போசிஸ் நிறுவனத்தின் பங்கு மிக மோசமாக சரிந்தது என்றும் ஒன்பது புள்ளி நான்கு சதவீதம் சரிந்ததால் அக்ஷதா மூர்த்திக்கு ஒரே நாளில் 500 கோடி இழப்பு ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. அக்ஷதா மூர்த்திக்கு இன்போசிஸ் நிறுவனத்தில் சுமார் 0.94 சதவீத பங்குகள் உள்ளன நேற்று மற்றும் நேற்று முன்தினம் அந்நிறுவனத்தின் பங்குகள் சரிந்த நிலையில் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாகவும் இதனால் அவரது மொத்த சொத்து மதிப்பு ரூ.6000 கோடி என குறைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன . இருப்பினும் இங்கிலாந்து நாட்டின் ராணி எலிசபெத் சொத்து மதிப்பை விட அக்ஷதா மூர்த்திக்கு அதிக சொத்து மதிப்பு உள்ளது என்றும் கூறப்படுகிறது.

akshata murthy2பங்குச்சந்தையில் இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் கடந்த இரண்டு நாட்களாக குறைந்த போதிலும் அந்நிறுவனம் வலிமையான நிறுவனமாக உள்ளது என்றும் எனவே மீண்டும் அந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் உயர வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் குறைந்துள்ள நிலையில் தற்போது அதை வாங்கிக் கொள்ளலாம் என்றும் நிச்சயம் ஒரிரு மாதங்களில் இந்நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய லாபத்தை கொடுக்கும் என்றும் கூறி வருகின்றனர்.

அக்ஷதா மூர்த்தி சொத்து மதிப்பு நேற்று ஒரே நாளில் 500 கோடி ரூபாய் குறைந்தாலும் அவருடைய சொத்து மதிப்பு இன்னும் ஒரு சில நாட்களில் மிகப்பெரிய அளவில் உயரும் என்று பங்கு வர்த்தக நிபுணர்கள் கூறி வருகின்றனர். 3 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு இன்போசிஸ் நிறுவனத்தின் பங்குகள் மிகப்பெரிய அளவில் சரிந்துள்ளது பங்குச் சந்தையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இன்போசிஸ் நிறுவனம் மட்டுமின்றி மற்றொரு ஐடி நிறுவனமான டிசிஎஸ் நிறுவனத்தின் பங்குகளும் குறைந்து உள்ளது என்பதும் மொத்தத்தில் ஐடி துறையின் பங்குகள் சரிந்து வருவது பங்குச் சந்தையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.