39 ரன்களில் விழுந்த 5 விக்கெட்டுக்கள்: இங்கிலாந்து இன்னிங்ஸ் வெற்றி!

154802868e1cd54ee179adb9ac782334

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வந்த மூன்றாவது கிரிக்கெட் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி இன்னிங்ஸ் வெற்றி பெற்றுள்ளது 

இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்தது 78 ரன்களுக்கு முதல் இன்னிங்சில் ஆட்டமிழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் மிக அபாரமாக விளையாடி 432 ரன்கள் குவித்தது. இங்கிலாந்து கேப்டன் ரூட் சதம் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது 

இந்த நிலையில் 2-வது இன்னிங்சில் இந்திய அணி நிதானமாக விளையாடிய என்பதும், குறிப்பாக தொடக்க ஆட்டக்காரர் ரோகித் சர்மா 59 ரன்களும், ரஹானே 91 ரன்களும், கேப்டன் விராத் கோலி 55 ரன்களும் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்தனர். இதனால் இந்தியா இந்த போட்டியை டிரா செய்ய முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது

ஆனால் 239 ரன்கள் இருந்தபோது விராட் கோலி அவுட் ஆன நிலையில் அதன் பின்னர் வெறும் 39 ரன்களுக்குள் 5 விக்கெட்டுகள் மளமளவென விழுந்ததை அடுத்து இந்திய அணி 278 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதனையடுத்து இங்கிலாந்து அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 76 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment