அண்ணா யுனிவர்சிட்டி அறிவிப்பு:செமஸ்டர் எக்ஸாம் நேரடி தேர்வு; ஆன்லைனில் கிடையாது! போராட்டத்தில் மாணவர்கள்!!

இரு நாட்களுக்கு முன்பு அண்ணா பல்கலைக்கழகம் சில அதிரடி அறிவிப்பு கூறியிருந்தது . அதுவும் குறிப்பாக இந்த ஆண்டு படிக்கின்ற மாணவ மாணவிகளின் தேர்வு பற்றி கூறியிருந்தது. அது என்னவெனில் இந்த ஆண்டு செமஸ்டர் எக்ஸாம் ஆனது நேரடி முறையில் கல்லூரிகளில் வைத்து எழுதப்படும் என்று கூறப்பட்டிருந்தது.

அண்ணா பல்கலைக்கழகம்

இதற்கு மாணவர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதோடு மட்டுமில்லாமல் மாணவர்கள் இணையதளத்தில் இது குறித்து பதிவு செய்து வாக்கெடுப்பு நடத்தி இருந்தனர்.நேரடி தேர்வை நடத்துவது எதிர்த்து மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை அமெரிக்கன் கல்லூரி மாணவர்கள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுகின்றனர்.

ஆன்லைனில் தேர்வு நடத்த கோரி ஆட்சியர் அலுவலகத்தை 600க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர் இந்த செமஸ்டர் தேர்வு ஆன்லைனில் நடத்தினால்தான் அடுத்த செமஸ்டர் தேர்வு நேரடியாக எழுத தயார் என்றும் மாணவர்கள் கூறியுள்ளனர்.

ஆன்லைனில் தேர்வு நடத்தக் கோரி சேலத்தில் மாணவர்கள் இயக்கம் சார்பில் ஆட்சியர் அலுவலகம் அருகே போராட்டம் நடைபெறுகிறது.ஆயினும்  பொறியல் மாணவருக்கான செமஸ்டர் தேர்வு எழுத்துத்தேர்வு நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் கூறியுள்ளது.

இதனால் மாணவர்கள் நேரடியாக கல்லூரிக்கு சென்று செமஸ்டர் எக்ஸாம் எழுத வேண்டிய என்ற கட்டாயத்தில் காணப்படுகின்றனர்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment