அசைவ பிரியர்களே உஷார்!! ‘சிக்கன்’ சாப்பிட்ட இன்ஜினியரிங் மாணவர் பலி;;

ஆந்திரா மாநிலம் கடப்பா பகுதியில் வசித்து வருபவர் 20 வயதான தீராஜ் ரெட்டி. இவர் ஒரு விடுதியில் தங்கி தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் நேற்று முன் தினம் மாணவர் கல்லூரி உணவகத்தில் சிக்கன் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. சிக்கன் சாப்பிட்ட அவருக்கு சிறிது நேரத்தில் வாந்தி, மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த சக மாணவர்கள் அவர் தங்கியிருந்த விடுதிக்கு அழைத்து சென்றனர்.
அப்போதும் மாணவருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலமாக அழைத்து சென்றனர். அந்த சமயத்தில் அவர் உடல் சோர்வு ஏற்பட்டு திடீரென பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த சம்பவம் அறிந்த போலீசார் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment