பொறியியல் செமஸ்டர் தேர்வு முடிவுகள்- வெறும் 38% மாணவர்களே தேர்ச்சி..!!

தற்போது பொறியியல் கல்லூரிகளில் செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று கொண்டு வருகிறது. இதற்கு முன்னதாக கடந்த மார்ச்-ஏப்ரல் மாதத்தில் ஒரு செமஸ்டர் தேர்வு நடைபெற்று இருந்தது. ஆனால் அவை கால தாமதமாக நடைபெற்றதாக தெரிகிறது.

இன்றைய தினம் அதற்கான முடிவுகள் வெளியாகி பேரதிர்ச்சியை உருவாக்கியது. அதன்படி அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் செமஸ்டர் தேர்வில் வெறும் 38 சதவீதம் மாணவர்கள் மட்டுமே அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

செமஸ்டர் தேர்வு எழுதிய 62 மாணவர்கள் ஒரு பாடம் அல்லது பல பாடங்களில் தேர்ச்சி பெறவில்லை என்றும் தெரிகிறது. 2021 நவம்பர் டிசம்பர் மாத பொறியியல் செமஸ்டர் தேர்வு தாமதமாக கடந்த மார்ச் ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது நடப்பாண்டிற்கான செமஸ்டர் தேர்வுக்கு தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு இத்தகைய முடிவு பேரதிர்ச்சியை கொடுத்ததோடு மட்டுமில்லாமல் கவனச்சிதறலை கொடுக்கும் என்று பேசப்பட்டு வருகிறது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment