Connect with us

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!

College students Affordable

தமிழகம்

பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது!

தமிழகத்தில் இளநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு தொடங்கி இருப்பதாக கூறப்படுகிறது.

2022-2023-ம் கல்வியாண்டில் பொதுப்பிரிவு கலந்தாய்வு இன்று தொடங்கியுள்ளது. இந்த கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் தங்களுடைய விருப்பமான கல்லூரிகளில் சேர்ந்து கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் கலந்தாய்வில் கலந்துகொள்ளும் மாணவர்கள் ஏற்கனவே 1.58 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்தனர். இந்த சூழலில் நீட் தேர்வு முடிவுகளுக்காக கலந்தாய்வு தள்ளிவைக்கப்பட்டது.

இதனிடையே 431 பொறியியல் கல்லூரிகளில் நடைபெறும் கலந்தாய்வில், அனைவருக்கும் இடங்கள் கிடைக்கும் என கூறப்படுகிறது. தற்போது நவம்பர் 13-ம் தேதி வரையில் இளநிலை பொறியியல் படிப்புக்கான கலந்தாய்வு நடைப்பெறுவதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், இன்றைய தினத்தில் ஒரு லட்சத்து 57 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top