மருத்துவ கலந்தாய்வுக்கு பின்புதான் பொறியியல் கலந்தாய்வு!!: அமைச்சர் அதிரடி;

இன்றைய தினம் தமிழகத்தின் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சில முக்கிய அறிவிப்புகளை கூறினார். அதிலும் பொறியியல் படிப்புக்கான கவுன்சிலிங் மருத்துவக் கலந்தாய்வுக்கு பின் நடைபெறும் என்று கூறினார்.

நீட் தேர்வு முடிவுகள் வந்த பிறகு பொறியியல் கலந்தாய்வு குறித்து அறிவிக்கப்படும் என்று அவர் செய்தியாளர்கள் மத்தியில் கூறினார். கலந்தாய்வு தொடர்பாக கல்வியாளர்கள் ஆலோசனை கூட்டம் மே 17ஆம் தேதி நடைபெறும் என்றும் அமைச்சர் பொன்முடி கூறினார்.

அண்ணா பல்கலைகழகத்தில் சான்றிதழ் கோரி விண்ணப்பித்தவர்களுக்கு பழைய கட்டணமே வசூலிக்கப்படும் என்றும் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கூறினார்.

மேலும் தாலிக்கு தங்கம் திட்டத்தில் பதிலாக அறிவிக்கப்பட்ட உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு ஆயிரம் ரூபாய் எப்போது வழங்கப்படும் என்ற கேள்வியும் கேட்கப்பட்டது. உயர்கல்வி படிக்கும் மாணவிகளுக்கு வரும் கல்வியாண்டு முதல் ரூபாய் ஆயிரம் வழங்கப்படும் என்றும் அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்தார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment