Connect with us

நடப்பாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு-இன்று முதல் தொடக்கம்!!

இன்ஜினியரிங் கலந்தாய்வு

தமிழகம்

நடப்பாண்டிற்கான பொறியியல் கலந்தாய்வு-இன்று முதல் தொடக்கம்!!

நம் தமிழகத்தில் நாளுக்கு நாள் பொறியியல் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு நேரடி தேர்வு முறை வைத்ததில் பலரும் பல பாடப்பிரிவுகளில் தோல்வி அடைந்தனர்.

அத்தகைய முடிவு கல்லூரிகள் அனைத்திற்கும் பேரதிர்ச்சனை ஏற்படுத்தியதாக காணப்பட்டது. இவ்வாறு உள்ள நிலையில் நடப்பாண்டில் மாணவர்களின் பொறியியல் கலந்தாய்வு இன்று முதல் தொடங்குவதாக தகவல் கிடைத்துள்ளது.

அதன்படி தமிழகத்தில் பொறியியல் கல்லூரிகளில் பிஇ, பிடெக், பி ஆர் படிப்பில் சேர இன்று முதல் கலந்தாய்வு நடைபெறுகிறது. தமிழகத்தில் உள்ள 431 கல்லூரிகளில் இன்று முதல் ஆகஸ்ட் 24ஆம் தேதி வரை சிறப்பு பிரிவினருக்கான கலந்தாய்வு நடைபெற உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

பொது மற்றும் தொழில் பிரிவினருக்கு கலந்தாய்வு ஆகஸ்ட் 25ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரை நான்கு சுற்றுகளாக நடைபெற உள்ளது. தமிழக முழுவதும் உள்ள 110 டிஎப்சி மையங்களில் நடைபெறும் கலந்தாய்வில் மாணவர்கள் கலந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top