தென்னிந்திய சினிமாவை பொறுத்த வரையில் வளர்ந்து வரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் விஜய் தேவரகொண்டா. இவர் நடித்த தமிழில் வெளிவந்த கீதா கோவிந்தம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் தனியொரு ரசிகர் பட்டாளத்தையே உருவாக்கினார்.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அவருக்கு அடுத்த பட வாய்ப்புகள் குவிய தொடங்கியது. அதன் படி, சமீபத்தில் இவர் நடித்த லைகர் படமானது கடந்த ஆகஸ்ட் மாதம் வெளியானது. பெரும் பொருட்செலவில் உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கவில்லை.
அதே சமயம் சுமார் 125 கோடி செலவில் உருவான இப்படத்தின் முதலீட்டில் முறைகேடு நடத்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக ஹவாலாப் பணம் பயன்படுத்தியதாக புகார் எழுந்த நிலையில், லைகர் படத்தின் இயக்குநர், தாயாரிப்பாளர் ஆகியோரிடம் அமலாக்கத்துறை போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனை தொடர்ந்து நேற்றைய தினத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவிடம் சுமார் காலை 8 மணி முதல் இரவு 8.30 மணி வரையில் அமலாக்கத்துறை போலீசார் கிடுக்குபுடி விசாரணை நடத்தினர். இத்தகைய சமபவம் தெலுங்கு சினிமாவில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது.
மேலும், விஜய் தேவரகொண்டா தற்போது குஷி படத்தில் நடித்து வருகிறார். இந்த படம் 2023-ம் ஆண்டு பிப்வரி மாதம் வெளியாகும் என படக்குழுவினர் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.