ஜார்க்கண்டில் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு தொடர்பாக நடத்தப்பட்ட சோதனையில் பெண் ஐஏஎஸ் அதிகாரி தொடர்புடைய இடத்திலிருந்து கட்டுக்கட்டாக ரூ.18 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஜார்கண்டில் கடந்த 2008-11 ஆம் ஆண்டில் ஒன்றிய மாவட்ட பொறியாளராகப் பணியாற்றிய ராம் வினோத் பிரசாத் சிங் என்பவர் 100 நாள் வேலை திட்டத்தில் முறைகேடு நடந்ததாக புகார்கள் எழுந்தது.
குறிப்பாக 18 கோடி தன்னுடைய தனிப்பட்ட வங்கிகணக்கிற்கு மாற்றியதாக 2017 ஆம் ஆண்டு அவர் மீது வழக்கு செய்யப்பட்டு 2018 ஆம் ஆண்டில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் குந்தி மாவட்டத்தில் துணை ஆணையர், தற்போதைய சுரங்கத்துறை செயலாளராக பணியாற்றி வரும் பூஜா சிங் தொடர்புடைய இடங்களில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.
இதில் பூஜா சிங் பட்டைய கணக்காளராக இருக்கும் ஒருவர் வீட்டில் இருந்து கட்டுக்கட்டாக 18 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.