Connect with us

சென்னையில் 3 மணி நேரம்..!!! அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!!!

IT Raid

செய்திகள்

சென்னையில் 3 மணி நேரம்..!!! அமலாக்கத்துறை அதிரடி சோதனை..!!!

சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் பேரில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் அமலாக்கத் துறையினர் சோதனை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அதன் ஒரு பகுதியாக சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் பேரில் சென்னை நுங்கம்பாக்கத்தில் பைனான்சியர் ரமேஷ் டக்கர் வீடு மற்றும் எழும்பூரில் உள்ள அவரது அலுவலகத்தில் அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.

ஏற்கனவே சட்டவிரோத பணப்பரிமாற்ற புகாரின் பேரில் நாடு முழுவதும் 50-க்கும் மேற்பட்ட கட்டுமான, பைனான்சியர் அலுவலகங்களில் சோதனை நடைப்பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக இன்றைய தினத்தில் சென்னையில் 10 இடங்களில் சோதனை நடைப்பெற்று வருவதாக கூறப்படுகிறது.

சுமார் 3 மணி நேரம் நடைப்பெறும்  இந்த சோதனை முடிவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம், முதலீடுகள் உள்ளிட்ட விவரங்கள் தெரியவரும் என கூறப்படுகிறது.

 

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in செய்திகள்

To Top