’எனிமி’ படத்தின் அட்டகாசமான டீசர்: இணையத்தில் வைரல்!

d635cd29f4eebf86388b70b970f728db-1-2

நடிகர்கள் ஆர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் இணைந்து பாலா இயக்கிய ’அவன் இவன்’ என்ற திரைப்படத்தில் நடித்தனர். அதன் பின்னர் நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது ’எனிமி’ என்ற திரைப்படத்தில் நடித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்தது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் சற்று முன்னர் இந்த படத்தின் டீஸர் வெளியாகியுள்ளது. இந்த டீசருக்கு ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் மிகப்பெரிய வரவேற்பு அளித்து வருகின்றனர் என்பதும் இணையதளங்களில் வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

ஆர்யா மற்றும் விஷால் ஹீரோ மற்றும் வில்லனாக நடித்து இருக்கும் நிலையில் இருவருடைய அதிரடி ஆக்ஷன் காட்சிகள் டீசரில் தெறிக்க வைக்கும் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக உன்னுடைய உண்மையான எதிரி யார் என்றால் உன்னை பற்றி முழுவதும் தெரிந்த உன்னுடைய நண்பன் தான் என்ற வசனம் இந்த டீசரில் உள்ளதை அடுத்து ஆர்யா மற்றும் விஷால் ஆகிய இருவரும் நண்பர்களாக இருந்து அதன்பின்னர் எதிரிகளாக மாறுவார்கள் என்பது தான் இந்த படத்தின் கதையாக இருக்கும் என்று தெரிகிறது 

தமன் இசையமைப்பில் ஆனந்த் சங்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் இந்த படம் வரும் செப்டம்பரில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.