என்னென்ன பொருட்களில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் என்னென்ன பலன் கிடைக்கும்?!


d319c9826e6fe4a830686750a379fba3

மஞ்சள், சாணம், சந்தனம், அரச இலைன்னு எதில் வேண்டுமானாலும் எளிதில் பிள்ளையாரை ஆவாகணம் செய்திடலாம். அவ்வளவு எளிமையானவர் இந்த முழுமுதற்கடவுளான பிள்ளையார். எல்லா பிள்ளையாரும் ஒன்றுன்னாலும் எந்தெந்த பொருளில் பிள்ளையார் பிடிக்குறோமோ அதற்கேற்றவாறு பலன் கிடைக்கும்.

1. மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல சௌபாக்கியமும் கிடைக்கும்

2. குங்குமத்தில் பிள்ளையார் பிடித்தால் செவ்வாய் தோஷம் விலகும்

3. புற்று மண்ணில் செய்த பிள்ளையாரை வணங்கினால் விவசாயம்           செழிக்கும்  பிணிகள் அகலும்

4. வெல்லத்தில் பிள்ளையார் செய்து வணங்கினால், உடலின் உள்ளேயும் வெளியேயும் ஏற்படும் கட்டிகள் (கொப்பளம்) கரையும்

5. உப்பினால் செய்து பிள்ளையார் செய்து வணங்கினால் எதிரிகள் காணாமல் போய்விடுவர்

6. வெள்ளெருக்கினால் உருவான விநாயகரை வழிபட்டால் , பில்லி சூனியம் விலகும்

7. விபூதியால் விநாயகர் பிடித்து வழிபட்டால் நோய்கள் தீரும்.

8. சந்தனத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் புத்திரப் பேரறு கிடைக்கும்

9. சர்க்கரையில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சர்க்கரை நோய் தீரும்

10. சாணத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி
வீட்டில் சுபகாரியம் நடைபெறும்.

11. வாழைப்பழத்தில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்

12. வெண்ணையில் பிள்ளையார் பிடித்து வழிபட்டால் கடன் தொல்லை தீரும்..

பலன்கள் தெரிந்து பிள்ளையார் செய்து வழிபட்டால் தக்க பலன் பெறலாம்..

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews