
தமிழகம்
தண்டோராவுக்கு முற்றுப்புள்ளி..!! இறையன்பு புதிய உத்தரவு..!!
சமீப நாட்களாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கும் விதமாக தண்டோரா மூலம் செய்திகளை பொதுமக்களுக்கு தெரிவிப்பார்கள்.
இந்த நிலையில் தண்டோராகளுக்கு தடை விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். குறிபாக வளர்ந்து வரும் காலகட்டத்தில் தண்டோரா மூலம் மக்களுக்கு செய்தி பரப்ப தேவையில்லை என கூறிவந்தனர்.
இதனை கருத்தில் கொண்டு தலைமைச் செயலாளர் இறையன்பு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் படி, வளர்ந்து வரும் காலகட்டத்திற்கு ஏற்ப தண்டோரா மூலம் மக்களுக்கு செய்தியை பரப்புவது தேவையில்லாத ஒன்று என கூறியுள்ளார்.
எனவே தண்டோரா மூலம் மக்களுக்கு செய்திகள் பரப்புவதை தடுக்க வேண்டும் என்றும் இவ்வாறான செயல்களில் யாராவது ஈடுபட்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.
இதற்கு பதிலாக ஒலிபெருக்கியை பயன்படுத்த வேண்டும் என்றும் இத்தகைய நடைமுறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என கூறியுள்ளார்.
