உள்ளத்தையும் உணர்வையும் உருக்கி இளையராஜா பாடிய என் காவிரியே பாடல்

இளையராஜாவின் இசைக்கு மயங்காதார் யாரும் இல்லை. தினசரி தொழிலாளிகள் முதல் மாடி வீட்டில் வாழும் பணக்காரர் வரை அவரவர்களின் மனசோகங்களை இளையராஜாவின் பாடல்தான் ஆற்றி வருகிறது.

ஆனால் சில பாடல்கள் நன்றாக இருந்தாலும் காலப்போக்கில் அதை மறந்திருப்பார்கள் அது போல இளையராஜாவின் பாடல்களை ஞாபகமூட்டுவதுதான் அடுத்தடுத்து நமது தளத்தில் வர இருக்கும் இளையராஜா பாடல்கள் பற்றிய கட்டுரையின் நோக்கம்.

இளையராஜாவின் இசையில் அவரின் குரலில் எத்தனையோ பாடல்களை கேட்டு இருப்பீர்கள் ஆனால் இந்த பாடலை கேட்கும்போது உங்கள் உணர்வுகளும் உள்ளமும் கலங்குவதை உணர்வீர்கள்.

இப்படி ஒரு மிக கனத்த சோகமான பாடலை இளையராஜாவின் ரசிகர்களே மறந்திருப்பார்கள். 1989ம் ஆண்டு வெளிவந்த எங்க ஊரு மாப்பிள்ளை என்ற படத்தில் இடம்பெற்ற இவரின் காவிரியே கண்ணீர் எதற்கு என்ற இந்த பாடல் அப்படியே உங்களை ஒரு வழி பண்ணி விடும்.

அந்த அளவு இளையராஜாவும் சித்ராவும் பாடிய இந்த பாடல் அவ்வளவு உணர்வுப்பூர்வமான அவ்வளவு ஒரு இனிமையான சோகப்பாடல்.

இணையத்தில் கிடைக்கும் இந்த பாடலை ஒருமுறை கேட்டுப்பாருங்கள் இந்த பாடலின் சுவையை உணர்வீர்கள்.

மனதில் உள்ள பாரங்கள் இலகுவாகும். சோகமாக இருக்கும்போது அப்படி ஒரு மன ஆறுதலை உங்களுக்கு கொடுக்கும் இந்த பாடல்.

இசைஞானி இளையராஜா பொதுவாக சோகப்பாடல்களை மிக அழகாக உள்ளம் உருக்கும் விதத்தில் பாடி இருப்பார். அப்படி ஒரு அருமையான சோகப்பாடல் இது.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.

Leave a Comment