செங்கல்பட்டில் நேற்று இருவர் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் கொல்லப்பட்டனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.
செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள பகுதியான நகர காவல்நிலையம் எதிரில் உள்ள டீக்கடைக்கு கே.தெரு பகுதியை சேர்ந்த கார்த்திக் என்ற அப்பு கார்த்திக் நாட்டு வெடிகுண்டு வீசியும் அரிவாளால் வெட்டியும் ஒரு கும்பலால் கொல்லப்பட்டது. இதில் கார்த்திக் தலை சிதைக்கப்பட்டது
அந்த கும்பல் நேராக வேகமாக தப்பித்து அங்கு உள்ள மேட்டுத்தெரு என்ற இடத்துக்கு சென்றது. அங்கு காய்கறி வியாபாரம் செய்து வரும் சீனுவாசன் என்பவரது மகன் மகேஷ் என்பவரையும் சரமாரியாக வெட்டிக்கொன்றது.
இருவரது உடலும் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் விசாரணையை முடுக்கி விட்ட போலீசார் இரவோடு இரவாக ஒரு பெண் உட்பட நான்கு பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இருவர் காவல்துறை என்கவுண்டர்க்கு பலியாகியுள்ளனர் இது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.