நீடிக்கும் பதற்றம்… புதுச்சேரியில் 6-வது நாளாக ஊழியர்கள் போராட்டம்!!!

மின் துறை தனியார் மயமாக்குதலுக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் துறை ஊழியர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் 6-வது நாளாக மின் துறை தலைமை அலுவலகத்தில் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் மின் துறையை தனியார் மயமாக்குதல் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து மின் துறை பொறியாளர்கள், அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் ஆகியோர் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

பணக்கார வாழ்கை… 6 வயது சிறுவன் நரபலி.. டெல்லியில் கொடூரம்..!!

இதனிடையே சோனாம்பாளையம் தலைமை அலுவலகத்தில் இருந்த மின்துறை ஊழியர்களை வெளியேற வலியுறுத்தினர். இருப்பினும் அவர்கள் வெளியேறாமல் இருந்ததால் போராட்டத்தில் ஈடுப்பட்ட 500-க்கும் மேற்பட்டவர்களை வலுக்கட்டாயமாக வெளியேற்றினர்.

பின்னர் கைது செய்த போலீசார் துணை மாவட்ட ஆட்சியர் முன் ஆஜர் படுத்தினர். அப்போது பொதுமக்களுக்கு ஈடையூறு விளைவிக்குமாறு நடந்து கொள்ள மாட்டோம் என்றும் மின் துறை ஊழியர்கள் தெரிவித்தனர்.

பூக்கள் விலை இருமடங்கு உயர்வு; மல்லிகை கிலோ ரூ.2000-க்கு விற்பனை!

இந்நிலையில் மின்துறை ஊழியர்கள் 6-வது நாளாக போராட்டத்தில் ஈடுப்பட்டு கோஷங்களை எழுப்பி வருகின்றனர். மேலும், மின்துறை அலுவலகங்கள் முன் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.