Connect with us

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர் சஸ்பெண்ட்!! வெளியானது அறிவிப்பு!!

202008091049048101 Tamil News Ration shop staff strike Registrar warns of nonpayment SECVPF

தமிழகம்

ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடும் ஊழியர் சஸ்பெண்ட்!! வெளியானது அறிவிப்பு!!

நம் தமிழகத்தைப் பொறுத்த வரையில் ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பான விவகாரம் தொடர்ந்தது அதிகரித்து வருகிறது. இவற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தப்போதிலும் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்நிலையில் கூட்டுறவு சங்க பதிவாளர், அனைத்து மண்டல பதிவாளர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார். அதில் நியாய விலைக்கடை பணியாளர்கள், ரேஷன் அரிசி கடத்தலில் ஈடுபடுவதை தடுக்க புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

அதன் படி, ரேஷன் அரிசி கடத்தப்பட்டதாக தகவல் பெறப்பட்ட 24 மணி நேரத்திற்குள், அரிசி கடத்தல் கண்டுபிடிக்கப்பட்ட பகுதியைச் சுற்றியுள்ள நியாயவிலைக் கடைகளில் பறக்கும்படை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

இதனிடையே அரிசி கடத்தலில் ஈடுபட்ட நியாயவிலைக் கடைப் பணியாளர்களை உறுதி செய்யப்பட்டால் அவர்களை உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்ய வேண்டும் என கூறியுள்ளார்.

அதே போல் அவர்கள் மீது குற்றச்சாட்டுக் குறிப்பாணை பிறப்பித்து, அப்பணியாளர்கள் நிரந்தர பணிநீக்கம் செய்யப்படுவதை கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்று கூறியுள்ளார்.

Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.
Continue Reading

More in தமிழகம்

To Top