கிராம தேவதைகள் வழிபாடு முக்கியம்- ஆதினம் வலியுறுத்தல்

9db0c56552bcc6cd06f98e36da0b3a87

கிராம தேவதைகள் வழிபாடு மிகவும் முக்கியம் என  கோவை காமாட்சிபுரி ஆதினம் வலியுறுத்தியுள்ளார்.திருப்பூர் மாவட்டம் பல்லடம் சித்தம்பலத்தில் நேற்று நடந்த  அமாவாசை வழிபாட்டில் பங்கேற்றபின் காமாட்சிபுரி ஆதினம் சிவலிங்கேஸ்வர ஸ்வாமிகள் கூறியதாவது. தொற்று பரவலை தடுக்க பணியாற்றிய எல்லோரையும் பாராட்ட வேண்டும். நீண்ட நாளாக மூடப்பட்ட கோவில்கள் தற்போதுதான் திறக்கப்பட்டுள்ளது.

நாட்டில் தொழில், மழை, வளம், கல்வி இவை எல்லாம் சரியாக இருக்க கிராமதேவதை வழிபாடுகள் மிகவும் மிக்கியம்.கிராமதேவதை வழிபாடு இருந்தால்தான் இவை எல்லாம் நன்றாக இருக்கும்.

எல்லா திருவிழாக்களுக்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. கிராம தேவதை வழிபாடுகள் அனைத்திற்கும் அரசு தடைவிதித்துள்ளது.  உரிய வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி விழாக்களை அரசு நடத்த அனுமதிக்க வேண்டும் என ஆதினம் கேட்டுக்கொண்டார்.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.