நம் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 4 நாட்களாக வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று மக்கள் நலம் விசாரித்தார். அதோடு மக்களை பாதுகாக்கும் வண்ணத்தில் பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார்.
குறிப்பாக நேற்றையதினம் மாநில பேரிடர் மையத்தில் நேரில் சென்று ஆய்வு செய்து அங்கு வந்த ஒரு புகார் அழைப்பை தானே ஏற்று பேசியிருந்தார்.இந்த நிலையில் தொடரும் கனமழை குறித்து முதலமைச்சர் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள நிலையில் முதல்வர் ஸ்டாலின் இன்று அவசர ஆலோசனை மேற்கொள்கிறார்.இந்த ஆலோசனை சென்னை தலைமைச் செயலகத்தில் நடக்க உள்ளது.
தலைமைச் செயலகத்தில் நடக்கவுள்ள இந்த ஆலோசனையில் தலைமைச் செயலாளர் மற்றும் அதிகாரிகள் ஆகிய பலரும் பங்கேற்கின்றனர்.தாழ்வான இடங்களில் தேங்கிய நீரை வெளியேற்ற நடவடிக்கை மற்றும் நிவாரண உதவிகள் பற்றி தீவிர ஆலோசனை செய்கிறார்.
மழைநீர் சூழ்ந்துள்ள பகுதிகளில் இருக்கும் மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பது பற்றியும் தீவிர ஆலோசனை மேற்கொள்கிறார் முதல்வர் ஸ்டாலின்.