எமதூதர்களை விரட்டி அடிக்க வேண்டுமா?! அப்ப, தினமும் சிவன் கோவிலில் இதை செய்ங்க…

நாள்தோறும் சிவன் கோவிலில் குங்கிலியப்புகை போடுவருக்கு தெய்வீக ரகசியங்கள் தெரியவரும் என்பது அகத்திர்யர் வாக்கு. எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தி குங்கிலிய புகைக்கு உண்டு. தன்னை மட்டுமல்லாமல் தன்னை சார்ந்தோருக்கும் எமதூதர்களிடமிருந்து காக்கும் சக்தியும் கிடைக்கும். சிவ வழிபாட்டில் குங்கிலிய புகை காட்டுவதை சித்தர்கள் வழக்கமாகவே வைத்திருக்கின்றனர். இந்து மதங்களில் மட்டுமில்லாமல் அனைத்து மத வழிபாட்டு முறைகளிலும் குங்கிலியம் காட்டுவது பொதுவானதாக உள்ளது…

c850bdda2606a917c5ff67f3b89c8a37

குங்கிலியபுகையே, குங்கிலியம் என்றால், சாம்பிராணிகளில் ஒருவகை.. முன்பு, அரசர்கள், செல்வந்தர்கள் வசிக்கும் இருப்பிடங்களில், வாசனைப்புகையாகவும், கிருமிகள், விஷ ஜந்துகளை விரட்டியடிக்க இவை பயன்பட்டன. வசம்பு, துளசி, வேம்பு, குங்கிலியத் தூள் உள்ளிட்ட சிலவற்றை நெருப்பு துண்டுகளில் போட்டு வீடு, தொழில் செய்யும் இடங்கள் முழுக்க காட்டுவது வழக்கம்.

இப்படி செய்வதால், கெட்ட நாற்றம், விசக்கிருமிகள் போகும். இப்போது செயற்கையாக கிடைக்கும் சாம்பிராணி வில்லைகளை வாங்கி ஏற்றுவதால் யாதொரு பலனும் இல்லை. நன்மைக்கு மாறாக சிலருக்கு அலர்ஜி, மூச்சு பிரச்சனைகளை இந்த செயற்கை சாம்பிராணியால் உண்டாகின்றது. சாம்பிராணி புகை போடுவதாக நம்மை நாமே, ஏமாற்றிக் கொள்கிறோம். தூபக்கால் எனும் சாம்பிராணி காட்டும் பாத்திரத்தில், தேங்காய் ஓடுகளை எரித்து, அதில் நெருப்பை உண்டாக்கி, அதில் மூலிகைகளுடன் சுத்த குங்கிலியம் பொடியாக்கி தூவ, வீடுகளில், தெய்வீக நறுமணம் உண்டாகும். இந்த சாம்பிராணி புகையை வீடுகளில் உள்ள பூஜையறையில் காட்டி விட்டு, பின்னர், வீடு முழுவதும், வரவேற்பறை, சமையலறை மற்றும் படுக்கையறை உள்ளிட்ட அனைத்து இடங்களிலும், சாம்பிராணி புகையை காட்டி வருவர்.

இமயமலைச்சாரல், பர்வத மலை, வெள்ளியங்கிரி மலை, கொல்லிமலை உள்ளிட்ட சில இடங்களில் ஒருவித மரத்தின் பிசினிலிருந்து கிடைப்பதே குங்குலியம் ஆகும். இது மருத்துவ குணமும் வாசமிக்கதாகவும் இருக்கு.

சாம்பிராணி புகை இடுவதால் ஏற்படும் நன்மைகள்…

முன்பு, குழந்தைகள் முதல் அனைவரும் வாரமொருமுறை எண்ணை தேய்த்து குளித்து வந்ததும், தலைமுடிக்கு சாம்பிராணி புகை போடுவது வழக்கம் குளித்து வந்ததும், தலையை துவட்டிக்கொண்டு சாம்பிராணி புகையை சுவாசித்தும், தலையிலும் காட்டிக்கொள்வர். பெண்களின் கருப்பை சார்ந்த பாதிப்புகளையும் சரி செய்வதுடன், சாம்பிராணி புகையை சுவாசிக்க, அது உடலில் உள்ள உள் உறுப்புகளை எந்த வியாதியும் அணுகாமல், காக்கும். மேலும், தலைக்கு சாம்பிராணி புகையை காட்டி வர, தலை முடி கருமையாக வளர்ந்து, நரைகள் இல்லாமலும் முடிக்கொட்டுதல், பொடுகு மாதிரியான தலைமுடி பிரச்சனைகள் ஏற்படாது.

குங்கிலிய மரப் பிசின்களில் உள்ள வேதிப்பொருட்கள், புற்று வியாதிகளை சரியாக்கக்கூடிய, மருத்துவ தன்மை மிக்கதென ஆராய்ச்சியில் கண்டறிந்திருக்கின்றனர். சாம்பிராணி புகை நச்சுக்கிருமிகளை அழிக்கும் ஆற்றல்மிக்கது, எனவே, வீடுகளில் நாம் பயன்படுத்தும் எல்லா இடங்களிலும் சாம்பிராணி புகையிட்டு வர, கிருமிகள் விலகும், குங்கிலியம் பொடியை கொண்டு தினந்தோறும் வீடு,தொழில் செய்யும் இடத்தில் புகை காட்டினால் கெட்ட சக்திகள் விலகி, நல்ல சக்திகள் உருவாகும்… செல்வ செழிப்பு உண்டாகும் தொழில் செய்யும் இடத்தில் மக்கள் வரவு அதிகம் ஆகும்.வியாபாரம் பெருகும்.

தூய்மையான குங்கிலியம் பர்வதமலை, கொல்லிமலை, கஞ்சமலை, சதுரகிரிமலை, அத்ரிமலைப் பகுதிகளில் கிடைக்கின்றது. இதிலும் கலப்படம் செய்யத் துவங்கியுள்ளனர். கலப்படமற்ற குங்கிலியத்தை பயன்படுத்தி தெய்வ ரகசியத்தை பெறுவோம்

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews