மாணவர்கள் கவனத்திற்கு! பிளஸ் 2 மாணவர்களுக்கு இது கட்டாயம்..!!

தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வு எழுதும் மாணவர்களுக்கு மின்னஞ்சல் முகவரி கட்டாயம் என பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு தொடங்க உள்ளது. இந்நிலையில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை ஒன்றை அனைத்து பள்ளிக்களுக்கும் அனுப்பி உள்ளது.

ஜல்லிக்கட்டு! தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகளை வெளியீடு!!

அதில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு பிறகு கல்லூரி சேர்க்கைக்காக நான் முதல்வன் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களுக்காக மின்னஞ்சல் முகவரி தேவைப்படுகிறது.

இதனிடையே அரசு பள்ளிகளில் தற்போது பொதுத்தேர்வு எழுதும் அனைத்துப்பள்ளி மாணவர்களுக்கும் மின்னஞ்சல் முகவரி உருவாக்க வேண்டும் என்று சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி, வருகின்ற 9 தேதி தொடங்கி 12-ம் தேதிக்குள் இந்த பணிகளை முடிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மாணவர்களே கவனம்! நாளை பள்ளிகளுக்கு விடுமுறை கிடையாது..!!

அதே போல் மின்னஞ்சலை எவ்வாறு கையாள வேண்டும் என்பது குறித்து மாணவர்களுக்கு உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் உயர்கல்வி சேர்க்கைக்கான பல்வேறு அறிவுறுத்தல்கள் போன்றவை மாணவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews
Follow @ Google: புத்தம் புதிய மற்றும் சுவரசியமான செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் நியூஸில் பின் தொடருங்கள்.