எலான் மஸ்க்கின் உலகின் மிகப்பெரிய ராக்கெட்.. சோதனையின் போது வெடித்து சிதறியதால் பரபரப்பு..!

பிரபல தொழிலதிபர் எலான் மஸ்க் அவர்களுக்கு நிறுவனம் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் அனுப்பிய உலகின் மிகப்பெரிய ராக்கெட் வெடிப்பு சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

உலகின் முன்னணி பணக்காரர்களில் ஒருவரான எலான் மாஸ்க் அவர்களுக்கு சொந்தமானது ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் என்பது தெரிந்தது. இந்நிறுவனம் ஸ்டார்லிங்க் செயற்கைக்கோள், விண்வெளி சுற்றுலா ஆகிய பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது என்பதும் இதற்கு உலகின் பல பகுதிகளில் இருந்து ஆதரவு கிடைத்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

starship

இந்த நிலையில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் உலகின் மிகப்பெரிய ராக்கெட் கடந்த சில வருடங்களாக உருவாகி வந்தது. இந்த ராக்கெட்டுக்கு ஸ்டார்ஷிப் என்று பெயரிடப்பட்டது. இந்த ராக்கெட் மூலம் நிலவு, செவ்வாய் ஆகிய கிரகங்களுக்கு மனிதர்களை அனுப்ப ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் அமெரிக்காவின் டெக்சாஸ் ராக்கெட் தளத்திலிருந்து ஸ்டார்ஷிப் என்ற உலகின் மிகப்பெரிய ராக்கெட் சோதனை முறையில் விண்ணில் செலுத்தப்பட்டது. முதல் கட்டம் முடிந்த இரண்டாவது கட்ட சோதனை தொடங்கிய போது ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த நிலையில் இது குறித்து விஞ்ஞானிகள் தெரிவித்த போது எதிர்பார்த்த முறையில் சோதனை நடைபெறவில்லை என்றும் இதில் உள்ள தவறுகள் சரி செய்யப்பட்டு மீண்டும் ஸ்டார்ஷிப் ராக்கெட் அனுப்பும் சோதனை விரைவில் செய்யப்படும் என்றும் தெரிவித்தனர்.

உலகின் மிகப்பெரிய ராக்கெட் வெடித்து சிதறியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தினாலும் விரைவில் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தினர் புதிய ராக்கெட்டை செய்து அனுப்புவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புத்தம் புதிய சுவாரசியமான செய்திகளுக்கு கூகுள் நியூஸில் பின்தொடருங்கள்:

GNews